காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் 3 நாட்களாக போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணா விரத போராட்டம் நடத்தி னார்கள்.
போராட்டத்தின் 3வது நாளான நேற்று விவசாயிகள் அனைவரும் இடுப்பில் இலை தழைகளை கட்டிக் கொண்டு தங்களது கோரிக்கை களை வலியுறுத்தி கோஷ மிட்டனர்.
கொளுத்தும் டெல்லி வெயிலில் நடுரோட்டில் சட்டை எதுவும் இல்லாமல் படுத்து புரண்டு கொண்டிருக்கும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
மண் சட்டிகளை அருகில் வைத்துக் கொண்டு ஒரு பிச்சைக் காரர்கள் போல் இலை தழைகளை உடுத்திக் கொண்டு அவர்கள் போராடும் விதத்தை பார்க்கும் போதே நெஞ்சு பதை பதைக்கிறது.
இதற்கிடையே, போராட்டக் காரர்களில் சிலர் தீக்குளிக்க நேற்று முயற்சி செய்திருக் கிறார்கள். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போராட்டக் காரர்களை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டனர்.
இதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்தது. அவர்கள் விவசாயி களின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியிருக் கிறார்கள்.
கடும் வெயிலில் அரை நிர்வாண மாக போராட்டம் நடத்திய விவசாயிகளில் 4 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். சின்னசாமி, ராமசாமி, ராமலிங்கம், சதாசிவம் என்ற
அந்த விவசாயிகள் கடும் வெயிலில் உண்ணா விரதம் இருந்ததால் இந்த பரிதாப நிலைக்கு ஆளானார்கள். அவர்கள் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது.
நடுரோட்டில் பிச்சை எடுத்தும், வெயிலில் படுத்து உருண்டும், பச்சை இலை தழைகளை மேலாடை யாக உடுத்திக் கொண்டும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும்
விவசாயி களுக்காக தமிழகத்தை ஆளும் கட்சியில் உள்ள 50 எம்பிகள் என்ன செய்து கொண்டிரு க்கிறார்கள். அவர்கள் அதிகாரத்திற்காக அடித்துக் கொள் வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.
அவர்களுடைய சொந்தப் பிரச்சனை களை ஓரம் கட்டி விட்டு விவசாயி களின் பிரச்சனை களுக்கு முக்கியத் துவம் கொடுக்க வேண்டும் என்று விவசாய அமைப்பினரும் பொது மக்களும் கோரியுள்ளனர்.