காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை... ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டங்களை தமிழக அரசு தடுத்து நிறுத்தும் வரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்ற
ஆவேச அறிவிப்புடன் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள், பல்வேறு அரசியல் இயக்கத்தினர், வணிகர் சங்கத்தினர், மாணவர்கள் ஒன்று திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காவிரி உரிமை மீட்புக்குழு இந்த போராட்ட த்திற்கு அழைப்பு விடுத்து கடந்த ஒரு மாதமாக பல்வேறு கிராமங் களுக்குப் பயணம் செய்து பிரசாரம் செய்துவந்த நிலையில் இன்று எழுச்சியுடன் இப்போ ராட்டம் தொடங்கியது.
தஞ்சாவூர் - காவிரி மீட்புக்குழு போராட்டம்
ஆற்றுநீர் பிரச்னை களைத் தீர்க்க ஒற்றை தீர்ப்பாயம் அமைக்கப் படும் என்ற அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு நாடாளு மன்றத்தில் அமைச்சர் உமாபாரதி அறிவித் திருந்தார்.
அது அமைக்கப் பட்டால் ஏற்கெனவே உள்ள காவிரி தீர்ப்பாயம் கலைக்கப் படும் என்ற அச்சமும், இனி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற சூழலும் உருவாகி தமிழக விவசாயி களை கொந்தளிக்க வைத்தது.
இந்நிலையில், தற்போது காவிரி டெல்டா மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் மீத்தேன் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி யுள்ளது.
நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தி ற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் தற்போது கையெழுத்தாகி யுள்ளது.
ஆனால் தமிழக அரசு இது எதையும் கண்டு கொள்ளாமல் ஆக்கப் பூர்வமான நடவடிக்கை களில் இறங்காமல், ஆர்.கே. நகர்
இடைத்தேர்தலில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறது என்ற ஆதங்கம் காவிரி டெல்டா மக்களைப் பெரும் மன உளைச் சலில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தான் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து நிர்ப்பந் திக்கும் வகையில் தொடர் காத்திருப்பு போராட் டத்திற்கு அழைப்பு விடுத்தது.
திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, கும்பகோணம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கு அதிகமான விவசாயிகள் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு திரண்டார்கள்.
காவிரி இல்லாமல் நம் வாழ்வில்லை... களம் காணாமல் காவிரி இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு... ஒற்றை தீர்ப்பாயத்தை கலைத்திடு.
மீத்தேன் திட்டத்தை கைவிடு. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு. தமிழக அரசே இதை தடுத்திடு என ஆவேசமாக முழக்கமிட்டார்கள்.
இப்பிரச்னைகள் தீரும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என செய்தியாள ர்களிடம் தெரிவித்த காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப் பாளர் பெ.மணியரசன்,
’கடந்த ஆண்டு கர்நாடகா வில் இருந்து கொஞ்சம் கூட காவிரி தண்ணீர் வரவில்லை. ஆறுகளில் நீரோட்டம் இல்லாததால் நிலத்தடி நீர் மிக மோசமான நிலையில் வறண்டு கிடக்கிறது.
இந்த ஆண்டு குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காது. காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டு மல்லாமல் தமிழ் நாட்டின் 19 மாவட்டங்கள் தண்ணீர் பஞ்சத்தில் பாதிக்கப் படக்கூடிய அபாயம் உருவாகி யுள்ளது.
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், ஒற்றை தீர்ப்பாயம், மீத்தேன் அனுமதி, ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தம் உள்ளிட்ட அறிவிப்புகளை தற்போது மத்திய அரசு வெளியிட் டுள்ளது.
இதற் கெல்லாம் எதிர்ப்பு தெரிவித் திருக்க வேண்டிய தமிழக அரசோ அமைதியாக அடங்கி கிடக்கிறது” என்றார்.
இப்போராட்ட த்தில் களமிறங்க அரியலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட இன்னும் பல்வேறு மாவட்ட ங்களைச் சேர்ந்த மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
சமூக வலைத் தளங்களிலும் இப்போரா ட்டம் குறித்த தகவல்கள் அனல் பறக்கிறது. இந்நிலையில் இப்போராட்ட த்தை முறியடிக்கும் முயற்சிகளில் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி யுள்ளார்கள்.
உடனடியாக கலைந்து செல்லுமாறு அச்சுறுத் தியதால் போராட்டக் காரர்களுக்கும் காவல் துறையின ருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
விவசாயி களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் கைது செய்யும் நடவடிக்கை களில் இறங்க காவல் துறையினர் தயக்கம் காட்டு கிறார்கள்.
நாங்கள் எதற்கும் தயார் என்ற மன உறுதியுடன் போராட்டக் களத்தில் இருக்கி றார்கள் விவசாயிகள்.