இலங்கை கடற்படையிடம் சிக்கிய மீனவர்... தற்கொலை முயற்சி !

கோடியக் கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து திரிகோண மலையில் அடைத்து வைத்துள்ள விவகாரத்தில்
இலங்கை கடற்படையிடம் சிக்கிய மீனவர்... தற்கொலை முயற்சி !
ஒரு மீனவர் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவ மனையில் அனு மதிக்கப் பட்டுள்ளார். 

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண் டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற் படையினர் சிறை பிடித்து ள்ளனர். 

அக்கறைப் பேட்டையைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான படகில், 8 பேர் கோடியக் கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண் டிருந்தனர்.

அப்போது அவர்களது படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், மீனவர் களையும் அவர்கள் சென்ற படகையும் சிறை பிடித்தனர். 

இந்த நிலையில் நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேர் சிறை பிடிக்கப் பட்டுள்ளது மீனவர் களிடையே கொந்த ளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இலங்கையின் பிடியில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி யுள்ளார். 

இருப்பினும் இலங்கை கடற்படை யினரின் அத்துமீறல் தொடர்வ தால் மீனவர் கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இந்நிலையில் அந்த 8 பேரில் ஒரு மீனவர், பாட்டிலை உடைத்து அதை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 
எஞ்சிய 7 மீனவர்கள் திரிகோணமலை சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 மீனவர் களையும், 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். 

இலங்கை கடற்படையின் அட்டகாசத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்."
Tags:
Privacy and cookie settings