சசிகலா அணி எம்எல்ஏ கருணாஸ், 'முக்குலத்தோர் புலிப்படை' கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளார். இந்தத் தகவலை, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பாண்டித்துரை தெரிவித்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தலைவராக இருந்து வந்தவர், நடிகர் கருணாஸ்.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில், திருவாடானைத் தொகுதியில், அ.தி.மு.க. சார்பாக இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா- பன்னீர் செல்வம்- தீபா என மூன்றாகப் பிரிந்தது அ.தி.மு.க. எம்எல்ஏ கருணாஸ், சசிகலா அணியில் இருந்து வருகிறார்.
இந்தநிலை யில், கடந்த 24-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் அனைத்துப் புதிய நிர்வாகிகளையும் அதிரடியாக நீக்கினார் கருணாஸ்.
மேலும், "நிர்வாகி களாக இருந்த வர்கள், அதிகாரபூர்வ அனுமதிக் கடிதம் இன்றிச் செயல் பட்டவர்கள் என்றும், மாவட்ட, ஒன்றிய, நகர புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப் படும் என்றும் கூறியி ருந்தார்.
இந்த நிலையில், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியிலிருந்து கருணாஸை நீக்கியு ள்ளதாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பாண்டித் துரை அதிரடியாக அறிவித் துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர் களிடம் பேசிய பாண்டித்துரை, கட்சியின் நிர்வாகிகளை நீக்க, கருணாஸுக்கு அதிகாரம் இல்லை.
சம்பாதிக்கும் பணத்தில் பங்கு கேட்பதாக கருணாஸ் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. ஆர்.கே. நகர்த் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிக்க உள்ளோம்" என்று கூறினார்.
இது குறித்து முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் கூறுகையில், "கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
முக்குலத்தோர் புலிப்படை அறக்கட்டளையாகத் தொடங்கப் பட்டு, அமைப்பாக மாறியுள்ளது. மாநில நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்ட பிறகு, எவ்வாறு என்னை நீக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.