கங்கை அமரனுக்கு வாய்ஸ் கொடுங்கள்... இளைஞர்கள் கோபம் !

இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே., நகரில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் கங்கை அமரன் நேற்று ரஜினி இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார்.
கங்கை அமரனுக்கு வாய்ஸ் கொடுங்கள்.... இளைஞர்கள் கோபம் !
மேலும் நடக்கவிருக்கும் தேர்தல் தொடர்பாக விவாதித்ததாக தெரிகிறது. தனக்கு ஆதரவு தரும்படி கங்கை அமரன் கேட்டுள்ளார். 

இந்த சந்திப்பு மூலம் கங்கை அமரனுக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுவரை நடந்த தேர்தல்களில் ரஜினி யாருக்கும் வாய்ஸ் கொடுக்காமல் அமைதியாக ஒதுங்கியே இருந்தார். அதே நேரம் ரஜினிக்கு பல வகையிலும் பிஜேபி நெருக்கடி கொடுத்தபடியே இருந்தது.

பிரதமர் ரஜினி வீட்டிற்கே சென்று பார்க்கும் அளவிற்கு ரஜினிக்கு அழுத்த ங்கள் வந்தது. டெல்லி தலைவர் அமித்ஷாவும் ரஜினியை எப்படி யாவது அழைத்து வாருங்கள் என்று அசைன்மென்ட் கொடுத்த படியே இருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகையாளர் மறைந்த சோவின் நட்பு வட்டமும் ரஜினியை அழைத்துக் கொண்டே தான் இருந்தது. 

ஆனால் வயது, உடல்நலப் பிரச்சனை கள் காரணமாக ரஜினி பட்டும் படாமலும் இருந்தார்.

இப்போது கங்கை அமரன் ஆர்கே நகரில் வேட்பாளராக களம் இறங்கி ரஜினியையும் சென்று பார்த்து ஆசிவாங்கினார். ரஜினி என்ன முடிவெடுப்பார் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. 

ஒரு வேளை இந்த சூழலில் எந்த அரசியல் கட்சிக்கும் வாய்ஸ் கொடுக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது. ஏற்கனவே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ரஜினி மீது கோபத்தில் உள்ளனர்.
இந்த நேரத்தில் ரஜினி கங்கைஅமரனுக்கு குரல் கொடுத்தால் மேலும் பெயர் கெட்டு விடும் என்பதே எதார்த்த மான நிலை. 

மேலும் பெரும் பட்ஜெட்டில் வரவிருக்கும் ஷங்கரின் எந்திரன் பார்ட் டூ படமும் பாதிக்கப் படும் என்பது போன்ற கருத்தும் நிலவுகிறது.

பார்க்கலாம் ரஜினி என்ன முடிவெடுப்பார் என்று.
Tags:
Privacy and cookie settings