யூடியூப் வீடியோவை பப்பர் ஆகாமல் பார்ப்பது எப்படி?

யூடியூப்பில் வீடியோக்கள் பார்க்கிறோம். அப்போது அடிக்கடி வீடியோ நின்று பப்பெரிங் ஆகும். பின்னர் மீண்டும் வீடியோ பார்க்கலாம். 
யூடியூப் வீடியோவை பப்பர் ஆகாமல் பார்ப்பது எப்படி?
இந்த பிரச்னையை தவிர்த்து தடையின்றி எப்படி யூடியூப் வீடியோக்களை பார்க்கலாம்…. 

அது எப்படின்னு பார்க்கலாம் வாங்க…

எனி டைம் இன்டர்நெட்டில் வசிப்பவர்கள் தான் தற்போது அதிகரித் துள்ளனர். பொழுது போக்கில் துவங்கி, பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வது வரை எல்லாவற்றிற் குமான விடையை யூடியூபில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய சேவையை வழங்கும் யூடியூப் வீடியோக்களை பார்க்க நமக்கு அதிவேக இன்டர்நெட் அடிப்படை தேவையாக உள்ளது. 

இன்டர்நெட் வேகம் குறையும் போது எந்த சேவையும் முழுமையாக பயன்படுத்த முடியாது.

இதேபோல் யூடியூப் வீடியோக்களை பார்க்க அதிவேகம் இல்லா விட்டாலும், சீரான இன்டர்நெட் இணைப்பு அவசியமான ஒன்றாக இருக்கிறது.
யூடியூப் வீடியோக்களை பப்பெரிங் ஆகாமல் பார்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். 

முதலில் யூடியூபிற்கான ஸ்மார்ட்வீடியோ (smart video) என்ற எக்ஸ்டென்ஷனை டவுன்லோடு செய்ய வேண்டும்.

கூகுள் குரோம் மற்றும் மொசில்லா பயர்பாக்ஸ் உட்பட பிரவுசர்களில் இந்த எக்ஸ்டென்ஷனை டவுன்லோடு செய்யலாம். ஸ்மார்ட்வீடியோ என்ற எக்ஸ்டென்ஷனை இன்ஸ்டால் செய்ததும், 

யூடியூபில் ஏதேனும் வீடியோவை தேர்வு செய்யுங்கள். பின்னர் மவுஸ் கர்சரை யூடியூப் வீடியோக்களிடையே கொண்டு சென்றால் சிறிய அட்டவணை திரையில் தெரியும்.

அதில் இருந்து குளோபல் பிரெபெரன்சஸ் (Global preferences) என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ஸ்மார்ட் பப்பெர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 
தொடர்ந்து யூடியூப் வீடியோக்கள் அனைத்தும் போர்ஸ் பப்பெர் செய்யப்படும். இனி நேரத்தை வீணடிக்காமல் வீடியோக்களை பப்பெரிங் தொல்லையின்றி பார்த்து ரசிக்க முடியும்.

இந்த வசதி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்க ளில் மட்டுமே கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் பயன் படுத்துவோர் இந்த சேவையை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத் தக்கது. 

அட விரைவில் இதுவும் செல்போனில் வந்துடும்ங்க…
Tags:
Privacy and cookie settings