வாட்ஸ்ஆப் மூலம் மனைவியை டைவர்ஸ் செய்த ஹைதராபாத் இளைஞர் !

அமெரிக்காவில் இருந்து ஹைதரபாதில் உள்ள தனது மனைவிக்கு மூன்று முறை தலாக் (விவாகரத்து) கூறி தனது இல்லற வாழ்க்கையை வாட்ஸ் ஆப்பிலேயே முறித்து கொண்டார். 
வாட்ஸ்ஆப் மூலம் மனைவியை டைவர்ஸ் செய்த ஹைதராபாத் இளைஞர் !
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஹைதரபாதைச் சேர்ந்த ஹுசைன் குரேஷியும், மஹ்ரீனும் கடந்த 2015-இல் திருமணம் செய்து கொண்டனர். 

அமெரிக்காவின் நியூயார்க்கில் மருந்து நிறுவனம் ஒன்றில் ஹுசைன் பணியாற்றி வருகிறார்.அவர் அங்கிருந்த படியே ஹைதராபாதில் உள்ள தனது மனைவி மஹ்ரீனுக்கு மூன்று முறை தலாக் கூறி 

விவகாரத்து செய்வதாகா வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பி யுள்ளார். வாட்ஸ் ஆப்பில் வாழ்க்கையை இளைஞர் ஒருவர் முறித்துக் கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings