பாடகி சுசித்ரா பகிர்ந்ததாக கூறப்படும் ட்வீட்கள், போட்டோக்கள், வீடியோக்கள் ஒரு புறம் எங்கள் மகன் என உரிமைகோரி மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கு மறுபுறம் என சிக்கல்களில் இருக்கிறார் நடிகர் தனுஷ்.
இந்நிலையில் அவரது சகோதரி விமலா கீதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது சகோதரரு க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு நிலைத் தகவலை பகிர்ந்தி ருக்கிறார்.
அந்த நிலைத் தகவலை பகிர்ந்த பின்னர் தனது சமூக வலைத்தள கணக்குகளை டீ ஆக்டிவேட் செய்தார் விமலா கீதா.
அவர் பதிந்திருந்த நிலைத் தகவல் வருமாறு:
கடந்த சில மாதங்க ளாகவே எங்கள் குடும்பம் மிகுந்த வலிகளுக்கும் வேதனை களுக்கும் இடையே சுழன்று கொண்டி ருக்கிறது. பல்வேறு பிரச்சினை களின் அழுத்தத் தால் நாங்கள் மவுனமாக இருந்து வருகிறோம்.
எங்கள் குடும்பம் ஏழ்மையில் சிக்கியிருந் தபோது ஒரே ஒரு நபரின் கடின உழைப்பும் தியாகமும் எங்களுக்கு உண்ண உணவு, கல்வியறிவு என அனை த்தையும் பெற்றுத் தந்தது.
தேனியின் ஒரு குக்கிராமத்தி லிருந்து வந்த நாங்கள் இன்றைக்கு பெற்றிரு க்கும் இந்த வாழ்வு ஒரே இரவில் கிடைக்கப் பெற்றதோ எவ்வித தியாகமும் செய்யாமல் எளிதாக கிடைக்கப் பெற்றதோ அல்ல.
இந்த உயரத்தை அடைவதற்காக என் சகோதரர்கள் எண்ணற்ற ஏளனங் களையும் தர்சங்கட மான சூழ்நிலை களையும், விமர்சனங் களையும் சந்தித்திரு க்கின்றனர்.
எங்களுக்கு எந்த மாதிரியான ஒழுக்கங்கள் கற்பிக்கப் பட்டன, எந்த மாதிரியான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்தோம் என்பதை இறைவன் அறிவார்.
தனுஷ் மிகப்பெரிய நட்சத்திரம். கடின உழைப்பின் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். ஆனால், வெற்றி வாய்ப்புகள் வரும் போது சில சிக்கல் களும் வரத்தான் செய்கிறது. பழிவாங்கும் படலங்களும் நடை பெறுகின்றன.
ஊடகத் துறையில் பணி யாற்றுபவர் களின் ஒழுக்கம் சார்ந்த கேள்விகளும், கதைகளும் உருவாவது இயல்பான தாகவே இருக்கிறது.
இருப்பினும், தமிழக மக்களை ரசிகர்களை தனது நடிப்பால் மகிழ்விக்கும் ஒரு நடிகருக்கு இத்தகைய துயரத்தை தருவது தகுமோ?
இன்றைய காலகட்டத்தில் ட்விட்டர் தளம் என்பது எதை வேண்டு மானாலும் தெரிவிக்கும் ஒரு இடமாக இருக்கிறது.
12 வயது குழந்தை கூட இருக்கும் ஒரு தளத்தில் இத்தகைய போலியான ஆபாச வீடியோக்களை சிலர் பகிர்வதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இதில் இன்னும் மோசமான விஷயம் என்ன வென்றால், சிலர் அத்தகைய வீடியோக் களை பார்ப்பதிலும் பகிர்வதிலும் காட்டும் ஆர்வம். எங்கள் குடும்பத்தினர் நிறைய இன்னல் களை சந்தித்து விட்டோம்.
எது வந்தாலும் ஒற்றுமையுடன் எதிர் கொள்வோம். மிகுந்த வேதனைக்கும் மன அழுத்த த்துக்கும் இடையே முகநூலில் இருந்தும் ட்விட்டரில் இருந்தும் நான் சில காலம் விலகி நிற்கிறேன்.
இவற்றை யெல்லாம் செய்வது யாராக இருந்தாலும்.. நிறுத்திக் கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு யாராவது சென்று விட்டால் அவர்களை மீட்க முடியாது.
குறிப்பாக பெண்கள் அத்தகைய முடி வெடுத்தால் செய்வதற்கு ஒன்று மில்லை. வாழுங்கள் வாழ விடுங்கள். சிறிது காலத்துக்கு உங்களிட மிருந்து விடை பெறுகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.