இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடை பெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 75 ரன்கள் வித்தியாச த்தில் வென்றது.
இதன் மூலம் ஆஸிக்கு எதிரான தொடரை இந்தியா சமன் செய்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டு களை வீழ்த்தி, அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.
188 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, பொறுமை யாகவே தனது ஆட்டத்தை தொடங்கியது.
4 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்ததும், 5வது ஓவரில் ரென்ஷா, இஷாந்த் சர்மாவின் வேகத்தில் கேட்ச் கொடுத்து வெளி யேறினார். 17 ரன்கள் எடுத்த வார்னர் அஸ்வினின் சுழலுக்கு வீழ்ந்தார்.
ஷான் மார்ஷ் 9 ரன்கள், ஸ்மித் 28 ரன்கள், மிட்சல் மார்ஷ் 13 ரன்கள் என தொடர்ந்து வந்த ஆஸி. வீரர்கள் சொற்ப ரன்கள் குவித்து, சீரான இடை வெளியில் ஆட்ட மிழந்தனர்.
ஒரு பக்கம் ஆஸி.வீரர் ஹான்ட்ஸ் காம்ப் மட்டும் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்க மறு முனையில் ஆஸி. வீரர்கள் வந்த வேகத்தில் வீழ்ந்து கொண்டி ருந்தனர்.
முடிவில் ஆஸி. அணி 112 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்து 75 ரன்கள் வித்தி யாசத்தில் தோல்வியைக் கண்டது.
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனாகி யுள்ளது.
அஸ்வினின் சாதனை
ரவிச்சந்திரன் அஸ்வின் 12.4 ஓவர்கள் வீசி, 41 ரன்கள் விட்டுத் தந்து 6 விக்கெட்டு களை வீழ்த்தினார். அஸ்வின் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டு களை வீழ்த்துவது இது 25-வது முறையாகும்.
மேலும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டு களை எடுத்த வர்கள் பட்டியலில், பிஷன் சிங் பேடியை முந்தி 5வது இடத்தையும் அஸ்வின் பெற்று ள்ளார்.