ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இலங்கை கடற்படையின் அராஜகம் அதிகமாகி விட்டது என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை யில், ''தமிழக மீனவர் களுக்கு எப்பொழுதும் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா.
இலங்கை கடற் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம், சிறைப்பிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப் படும் போதெல்லாம்,
இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தவர் ஜெயலலிதா. மத்திய அரசுக்கு தனது வேண்டுகோளை உறுதியாகத் தெரிவி த்தவர் ஜெயலலிதா .
மீனவர்களைப் பாது காப்பதற்கு தேவையான நடவடிக் கைகள் எடுத்ததோடு பாதிக்கப் பட்ட மீனவக் குடும்பங் களுக்குத் தேவையான அத்தனை நிவாரணங் களையும் வழங்கி அவர்களின் கண்ணீரைத் துடைத்தவர் ஜெயலலிதா.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், அடித்து துன்புறுத்து வதும், வலைகளை அறுத்து வீசுவதும், மீனவர்களை சிறையில் அடைத்து கொடுமைப் படுத்து வதும், வாடிக்கை யாக நடந்து வந்தது.
ஜெ.வின் ஆட்சியிலே அது கட்டுப் படுத்தப் பட்டு. மீனவ குடும்பங்களில் நிம்மதி நிறைந் திருந்தது.
ஜெ.மறைவிற்குப் பிறகு இலங்கை கடற் படையின் அராஜகம் அதிகமாகி விட்டது. 4-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப் பேட்டை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள், 5-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம்,
ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம் பட்டினம் மீனவர்கள் 24 பேரையும் இலங்கை கடற் படையினர் மனிதாபி மானமற்ற முறையில் பிடித்துச் சென்றிருக் கிறார்கள்.
இந்த அராஜகத்தின் உச்சமாக நேற்று ராமேஸ்வர த்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இந்திய கடல் எல்லைக்குள்
அத்து மீறி நுழைந்த இலங்கை கடற் படையினர் கையெறி குண்டு களை வீசி தாக்கியி ருக்கிறார்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டிருக் கிறார்கள்.
இதில் தாசன் என்ற 22 வயது மீனவ இளைஞர் மீது குண்டு பாய்ந்து படகிலேயே பலியாகி யிருக்கிறார், சரோன் என்ற மீனவ இளைஞர் மீது குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
இலங்கை கடற் படையின் இந்த வெறி ஆட்டத்தால், மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ் வாதாரமாகக் கொண்டு வாழும் மீனவக் குடும்ப ங்களும், மீனவ மக்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக் கிறார்கள்.
மத்திய அரசும், மாநில அரசும் இதை அலட்சிய மாக எண்ணாமல் தீவிர நடவடிக்கை எடுத்து இது போன்ற கொடுமைகள் இனிமேல் நடை பெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்வதோடு
இரக்கமே இல்லாத இலங்கை கடற் படைக்கும் இலங்கை அரசுக்கும் எனது கடும் கண்டன த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.