நடிகரும் திருவாடானை எம்எல்ஏ வுமான கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். கடந்த தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.
அவருக்கு மட்டும் சீட் வழங்கப் பட்டது. அவர் வெற்றி பெற்றார். இந்த நிலை யில் கருணாஸ் தனது கட்சியின் நிர்வாகிகள் அனை வரையும் கூண்டோடு மாற்றி யுள்ளார்.
அதற்கு முக்கிய காரணம், கருணாசால் நியமிக்கப் படாமல் பலரும் தாங்களா கவே புதிய பதவிகளை போட்டுக் கொண்டு செயல் படுவதாக புகார்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து தான் அவர் தனது கட்சி நிர்வாக த்தை கூண்டோடு கலைத் துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், முக்குலத்தோர் புலிப்படையின் மாநில நிர்வாக அமைப்பு கூண்டோடு கலைக்கப் பட்டது.
விரைவில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டத் திற்குப் பிறகு புதிய மாநில நிர்வாகிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப் படும்.
ஏற்கனவே, நிர்வாகிகளாக செயல் பட்டவர்கள் எனது அதிகாரப் பூர்வ அனுமதி கடிதம் இல்லாமல் தற்காலிக மாக செயல் பட்டது குறிப்பிடத் தக்கது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.