இன்சூரன்ஸ் கட்டணம், டீசல் மீதான வாட்வரி, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் பயன்படுத்த மத்திய அரசின் தடை உத்தரவு ஆகிய விவகாரங் களைக் கண்டித்து,
மார்ச் 30-ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று தென்மாநில லாரி உரிமை யாளர்கள் சம்மேளனம் அறிவித் திருந்தது.
இந்த அறிவிப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் லாரி ஸ்டிரைக் இன்று தொடங்கியது. பேச் சுவார்த்தை நடத்தக் கூட தமிழக அரசு முன் வர வில்லை என்றனர் லாரி உரிமை யாளர்கள்.
ஆர்டிஓ தொடர்பான கட்டணங்கள், பெட்ரோல், டீசல் வாட்வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கை களை வலியுறுத்தி, இன்று முதல் லாரி ஸ்டிரைக் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனால், தமிழகத்தில் மட்டும் 12 லட்சம் லாரிகள் ஓடாது. சரக்குகள் கடுமையாக தேக்கமடையும் அபாயமும் ஏற்பட் டுள்ளது.
மேலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங் களைச் சேர்ந்த 40 லட்சம் லாரிகளும் இந்த வேலை நிறுத்தப் போராட்ட த்தில் ஈடுபடு கின்றன.
இந்த நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரை, லாரி உரிமை யாளர்கள் சங்கத்தினர் இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.
அதன் பிறகே, இந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுமா என்பது குறித்து தெரியவரும்.