நோயாளி இறந்து விட்டதாக கூறி உயிருடன் எரித்த பரிதாபம் !

இந்தியாவில் பெண் நோயாளி ஒருவர் இறந்து விட்டதாக மருத்துவர் தவறுதலாக கூறியதை தொடர்ந்து அப்பெண் உயிருடன் எரித்துக் கொல்லப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
நோயாளி இறந்து விட்டதாக கூறி உயிருடன் எரித்த பரிதாபம் !
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரில் Devesh Chaudhary(23) மற்றும் Rachna Sisodia(21) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.

சில தினங்க ளுக்கு முன்னர் மனைவிக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை கணவர் மருத்துவ மனையில் அனுமதித் துள்ளார்.

ஆனால், அவரது மனைவி அபாயக் கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவி த்துள்ளனர்.

இரண்டு தினங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பெண் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித் துள்ளனர்.

நண்பர்களுடன் மனைவி யின் உடலை எடுத்துச் சென்ற கணவர் மனைவியின் பெற்றோருக்கு கூட தகவல் தெரிவிக்கமால் சவத்தில் வைத்து எரிக்க ஏற்பா டுகளை செய்துள்ளார்.
இத்தகவல் அறிந்த மனைவியின் பெற்றோர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்து சுடு காட்டிற்கு விரைந் துள்ளனர்.

ஆனால், இவர்கள் செல்வ தற்குள் பெண்ணிற்கு தீயிட் டுள்ளனர். சவத்தில் எரிந்துக் கொண்டு இருந்த பெண்ணின் உடலை பொலிசார் இழுத்து வெளியேற்றி யுள்ளனர்.

இருப்பினும், பெண்ணின் உடல் சுமார் 70 சதவிகிதம் வரை தீயில் எரிந்து உயிரிழந் துள்ளது.

எனினும், சந்தேகம் அடைந்த பொலிசார் எரிந்த சடலத்தை தடவியல் துறை மருத்துவர் களுக்கு அனுப்பி வைத்தனர்.

சடலத்தை மருத்து வர்கள் சோதனை செய்தபோது, நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாயில் சாம்பல் இருந்ததை கண்டு பிடித்து ள்ளனர்.

ஒருவரை உயிருடன் எரிக்கும் போது மட்டுமே சாம்பல் மூச்சுக் குழாய் வழியாக உடலுக்குள் செல்லும்.
எனவே, பெண்ணை எரிக்கும் போது அவர் சுவாசித்துக் கொண்டு இருந் துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த கணவர் தற்போது தலை மறைவாக உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
Tags:
Privacy and cookie settings