சஞ்சிதா ஷெட்டி பெயரில் உலவும் நிர்வாண போட்டோ தன்னுடை யதல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான வீடியோக்களும், போட்டோக்களும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
அது மட்டு மில்லாமல், அந்த டுவிட்டர் கணக்கில் இன்னும் பல பிரபலங்களின் புகைப் படங்களும், வீடியோக்களும் வெளியிடப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், இது எல்லா வற்றயும் தான் செய்ய வில்லை என்று சுசித்ரா மறுப்பு தெரிவித் துள்ளார்.
அவரது டுவிட்டர் கணக்கை யாரோ ஒருவர் முடக்கி விட்டதாகவும், தான் எந்த கருத்தும் பதிவு செய்ய வில்லை என்று கூறியிருந்தார்.
இருப்பினும், அவரது பெயரில் வெளியிடப்பட்ட போட்டோக் களில் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண புகைப்படமும் இடம் பிடித்தி ருந்தது.
இது குறித்து, சஞ்சிதா ஷெட்டி அளித்துள்ள விளக்கத்தில், சமூக வலைத் தளத்தில் நேற்று முதல் நடப்பவற்றை யெல்லாம் நான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறேன்.
என் பெயரில் உலவும் நிர்வாண போட்டோ என்னுடைய தல்ல என்று கூறியுள்ளார்.
சஞ்சிதா ஷெட்டி தமிழில், ‘வில்லா’, ‘சூது கவ்வும்’, ‘என்னோடு விளையாடு’, ‘ரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.