ரயில் பயணிகளின் வசதிக்காக பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய புதிய ஆப்-ஐ ரயில்வே துறை அறிமுகம் செய்யவுள்ளது. எஃப்.எம், தொலைக்காட்சி உள்ளிட்ட சேவைகள் புதிய ஆப் மூலம் பெற முடியும்.
இந்த ஆப் வடிவமைப் பதற்கான டென்டரை ரயில்வே அமைச்சகம் கோரி யுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்க வுள்ள இந்த ஆப் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள் வழியாக, ரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்க வுள்ளது.
3 ஆண்டுகளில் ரூ.2,277 கோடியும், 10 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு ரூ.20,000 கோடியும் வருமானம் கிடைக்கு மென எதிர்ப் பார்க்கப் படுகிறது.
எஃப்.எம், தொலைக்காட்சி மட்டுமின்றி சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட பாடல் களையும் ஆப்-இல் கேட்டு மகிழலாம்.
ரயில்வே துறை அறிமுகப் படுத்தவுள்ள இந்த சேவை ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்ப் பார்க்கப் படுகிறது.