தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக முயற்சி செய்ய மாட்டேன் என தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
பரபரப்பாக எதிர் பாக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், அதிமுக சார்பில் தினகரன் போட்டி யிடுகிறார் என இன்று காலை அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தினகரன், ஆட்சி மன்ற குழுவின் விருப்பப்படி நான் ஆர்.கே.நகர் தொகுதில் போட்டி யிடுகிறேன். இந்த தேர்தலில் திமுகவை மட்டுமே நாங்கள் எதிர் அணியாக கருதுகிறோம்.
கண்டிப்பாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். மறைந்த முதல்வர் ஜெ.வின் நலத் திட்டங்கள் அங்கு நிறைவேற்றப் படும்.
வருகிற 23ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்வேன் என அவர் தெரிவித்தார். அப்போது, தேர்தலில் வெற்றி பெற்றால், நீங்கள் முதல்வராக முயற்சி செய்வீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தினகரன், நிச்சயம் இல்லை. அதிமுகவின் ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக தொடர்வார். அதில் எந்த மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்தார்.