ஸ்ருதிஹாசனுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார்?

1 minute read
இங்கிலாந்து சென்றுள்ள கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதியின் காதலர் என்று கிசுகிசுக் கப்படும் நாடக நடிகர் மைக்கேல் கார்செலை சந்தித்துள்ளார்.
ஸ்ருதிஹாசனுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார்?
இங்கிலாந்து அரண் மனையில் பிரிட்டன் – இந்தியா கலாச்சார வரவேற்பு நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். 

இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சி க்கான சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக உலக நாயகன் கமல் ஹாஸன் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்ற அவர் லண்டனில் ஒருவரை சந்தித் துள்ளார். ஸ்ருதி ஹாஸனின் காதலர் என்று கிசுகிசு க்கப்படும் மைக்கேல் கார்செல் லண்டனை சேர்ந்தவர். 

லண்டன் சென்றுள்ள கமல் மைக்கேலை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.காதலர் தினத்தை கொண்டாட மைக்கேல் மும்பை வந்தபோது ஸ்ருதியுடன் தங்கியுள்ளார்.

விமான நிலையத்தில் இருவரும் ஜோடியாக நடந்து வந்தபோது எடுத்த புகைப் படங்கள் வெளியாகின.மைக்கேலுடன் காதல் குறித்த செய்திகள் பற்றி ஸ்ருதி கூறுகையில், மற்றவர்களின் கணிப்புகள் பற்றி கவலை இல்லை. 
அது குறித்து நான் கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்றார்.ஸ்ருதி தனது காதலை மறுக்கவும் இல்லை, ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

இந்நிலையில் கமல் மைக்கேலை சந்தித்து பேசியிருப்பது திருமணம் பற்றி இருக்குமோ என்று நெட்டிசன்கள் ஆளாளுக்கு பேசத் துவங்கி விட்டனர்.
Tags:
Today | 21, March 2025
Privacy and cookie settings