தாயை காப்பாற்றிய சிறுவன்... உதவிய ஆப்பிள் Siri !

லண்டனில் உள்ள கென்லே பகுதியில் வசிக்கும் நான்கு வயது சிறுவன் ரோமன். அவன் செய்த விஷயம் அனை வரையும் ஆச்சர்யப்பட வைத் துள்ளது. 
தாயை காப்பாற்றிய சிறுவன்... உதவிய ஆப்பிள் Siri !
மரணத்தின் பிடியில் இருந்த தனது தாயை ஐபோனின் வாய்ஸ் அசிஸ்டென்ட்டான சிரியின் உதவியுடன் காப்பாற்றி அனைவரையும் நெகிழ வைத்து ள்ளான் ரோமன்.

நான்கு வயது சிறுவன் ரோமன் தனது தாய் மயங்கிய நிலையில் இருப்பதை அறிந்து எழுப்பி யுள்ளான். தனது தாய் எழுந்திரு க்காமல் இருந்ததை யடுத்து பதறிய ரோமன். 

தனது தாயின் ஐபோனை எடுத்து அவரது கட்டை விரலை வைத்து சிரியை ஆன் செய்துளான். 

அதன் மூலம் தனது தாய் மயங்கிய நிலையில் இருப்பதை தெரிவிக்க சிரி ஆம்புலன்ஸு க்கான எண்ணான 999- ஐ அழைத் துள்ளது. 

அதில் போலிஸ் உங்களது அவசர தேவை என்ன என கேட்க? ''நான் ரோமன், என் தாய் வீட்டில் மயங்கிய நிலையில் இருக்கிறார். 

எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? அவரை வீட்டில் வந்து அழைத்து செல்ல முடியுமா என கேட்டுள்ளான். அவர் இறந்து விட்டார் என நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளான். 
மீண்டும் 999 எண்ணில் தொடர்பில் இருந்த வர்கள் தெளிவாக ரோமனிடம் கேட்க அவர் கண்களை மூடிய நிலையில் நீண்ட நேரமாக இருக்கிறார். அவர் மூச்சு விடவில்லை என்று மழலை மாறாமல் கூறி யுள்ளான்.

நிலையை புரிந்து கொண்ட அவசர அழைப்பில் இருந்த வர்கள் ரோமனிடம் வீட்டு முகவரியை கேட்டு ள்ளார்கள். 

அவனும் முகவரியை அளிக்க 13 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து மயக்கத்தில் இருந்த ரோமனின் தாயை காப்பாற்றி யுள்ளது. அவர் சரியான நேரத்தில் அளிக்கப் பட்ட சிகிச்சை யால் உயிர் பிழைத் துள்ளார். 

இதற்கு காரணம் ரோமன் சரியான நேரத்தில் சிரியை கையாண்டு 999க்கு அழைத்தது தான் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் நெகிழ்ந் துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித் துள்ள போலீஸ் அதிகாரி ''குழந்தைகள் இன்றைய தொழில் நுட்பத்தை நன்கு அறிந் துள்ளனர். 
அவசர நேரங்களில் சமயோஜிதமாக யோசித்து சிரியை அழைத்து தனது தாயை காப்பாற்றி யிருப்பது உண்மை யாலுமே பெருமைப்பட வேண்டிய விஷயம் என்று கூறியுள்ளார்.
சிரி மூலம் இதே போல் நிறைய பேர் காப்பாற்றப் பட்டுள்ளனர். தனது ஒரு வயது குழந்தை மூச்சு விட முடியாமல் தவித்த போது சிரி மூலம் ஆம்புலன்ஸை அழைத்து தனது மகளை தாய் ஒருவர் காப்பாற்றி யுள்ளார். 

ஒருவரது ட்ரக் கவிழ்ந்து அதிலிருந்து தப்பிக்க முடியாமல் இருந்த போதும் சிரி உதவியால் உயிர் பிழைத் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings