தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்க ப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் ஏற்கனவே 5 நகரங்களில் நடத்தப்பட்டது.
ஏற்கனவே சென்னை, சேலம், திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. இந்தியா முழுவதும் 80 நகரங்களில் முன்னதாக நீட் தேர்வு நடத்தப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் கூடுதலாக 23 இடங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித் துள்ளார்.
அவர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித் துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த வருடம் நடந்த நீட் தேர்வானது,
இந்த ஆண்டு மேலும் 23 நகரங்களில் நடைபெற உள்ளதாக தெரிவித் துள்ளார். இதன் மூலம் இந்த வருடம் 103 இடங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.
ஐ.ஐ.டி, ஜே.இ.இ தேர்வு நடந்த இடங்களில் நீட் தேர்வு நடக்கும் என ஜவடேகர் கூறியுள்ளார். புதியதாக நீட் தேர்வு நடைபெறும் 23 நகரங்கள் பட்டியலையும் அவர் ட்விட்டரில் தெரிவித் துள்ளார்.
அதில் தமிழகத்தின் நெல்லை, வேலூர், நாமக்கல் மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 8 இடங்களில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.
நீட் தேர்வு நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப் படுவார்கள் என்ற கவலை எழுந்துள்ளது.
இதனால் தமிழக சட்ட சபையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் தீர்மானம் நிறைவேற்றி, அதனை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.