ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பிரசாரத்தால் அ.தி.மு.க. பெண் அமைச்சர் உள்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தேர்தல்
அலுவலகத்தை விட்டு 5 மணி நேரத்துக்கும் மேலாக வெளியேற முடியாமல் தவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டி.டி.வி. தினகரன், மதுசூதனன், கங்கைஅமரன், மருது கணேஷ் ஆகியோர் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட் டுள்ளனர். பிரசாரத்தின் போது தேர்தல் வாக்குறுதி களை அவர்கள் அள்ளி வீசிய வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் தண்டையார் பேட்டை அப்போலோ மருத்துவ மனை அருகில் தான் டி.டி.வி. தினகரன், மருது கணேஷ், தீபா உள்ளிட்ட வேட்பாளர் களின் தேர்தல் அலுவலகம் அமைக்கப் பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் தி.மு.க. சார்பில் நேற்று மாலை நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மருது கணேஷை ஆதரித்து கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதனால் அங்கு கூட்டம் அலை மோதியது. இதனால் தேர்தல் அலுவலக த்துக்கு வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் கட்சியினரால் செல்ல முடிய வில்லை.
வேட்பாளரின் வருகைக்காக தேர்தல் அலுவலகத்தில் பெண் அமைச்சர் ஒருவர் உள்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் காத்திருந்தனர். தி.மு.க. கூட்டத்தால் வேட்பாளர் டி.டி.வி. தினகரன், அலுவல கத்துக்கு வராமல் பிரசார இடத்துக்குச் சென்று விட்டார்.
தேர்தல் அலுவலகத் திலிருந்த அமைச்சர் உள்பட கட்சியினரால் வெளியே செல்ல முடிய வில்லை. இதனால் அவர்கள் 5 மணி நேரம் தேர்தல் அலுவல கத்திலேயே முடங்கினர்.
ஸ்டாலின்
இது குறித்து டி.டி.வி. தினகரன் தரப்பு கூறுகையில், "வேட்பா ளருடன் பிரசாரத்து க்குச் செல்ல அமைச்சர், முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட் டவர்கள் தேர்தல் அலுவல கத்தில் காத்தி ருந்தனர்.
தி.மு.க. கூட்டத்தால் எங்களால் வெளியில் செல்ல முடிய வில்லை. எங்களது கார்களும் அலுவலக த்தை விட்டு தூரத்தில் நிறுத்தப் பட்டு இருந்தன. அவற்றை அலுவலகம் அருகில் கொண்டு வர முடிய வில்லை.
தி.மு.க. கூட்டம் நடக்கும் போது சென்றால் தேவை யில்லாத சர்ச்சை ஏற்படும் எனக்கருதி தேர்தல் அலுவலக த்தில் தேர்தல் பணிகளை விவாதித் தனர். 5 மணி நேரத்துக்குப் பிறகு அனைவரும் அங்கிருந்து சென்றனர்" என்றனர்.