அடையாளத்தை அழிச்சதில் இருந்து தெரியலையா? தனுஷ் எங்க மகன்னு

1 minute read
மச்சத்தை லேசர் மூலம் அழித்ததில் இருந்து உண்மை தெரிய வில்லையா என்று தனுஷை தங்களின் மகன் என்று வழக்கு தொடர்ந்த திருப்புவனம் தம்பதி தெரிவித் துள்ளனர்.
அடையாளத்தை அழிச்சதில் இருந்து தெரியலையா? தனுஷ் எங்க மகன்னு
நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று கூறி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி மேலூர் நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனுஷின் அங்க அடையா ளங்கள் சரிபார்க்கபட்டு மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. 

தனுஷின் அங்க அடை யாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப் பட்டுள்ள தாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து கதிரேசன்- மீனாட்சி தம்பதி கூறும்போது,

நாங்கள் ஒன்றும் பணம், காசுக்காக வழக்கு தொடர வில்லை. தனுஷ் எங்கள் மகன். இவர்கள் தான் என் அம்மா, அப்பா என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தாலே எங்களுக்கு போதும்.

தனுஷ் எங்களின் மகன் என்பதை உலகிற்கு நிரூபிக்கவே போராடிக் கொண்டிரு க்கிறோம். இந்த வழக்கில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை யுடன் உள்ளோம்.
தனுஷின் அங்க அடையா ளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப் பட்டுள்ள தாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் இருந்தே உண்மை தெரிகிறதே.

தனுஷ் எங்கள் மகன் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான் மரபணு பரிசோதனைக்கு தயாராக உள்ளோம். 

தனுஷ் எங்களின் மகன் என்பதை நிரூபித்துக் காட்டுவோம் என்றனர் கதிரேசன்-மீனாட்சி தம்பதி.
Tags:
Today | 4, April 2025
Privacy and cookie settings