திருட்டை கண்டுபிடிக்க திணறும் போலீசார் !

வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா காட்சிப் பொருளாக மாறியதால், திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
திருட்டை கண்டுபிடிக்க திணறும் போலீசார் !
வால்பாறை நகரின் மத்தியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், கடந்த, 2015 ம் ஆண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டது. 

அண்ணாசிலை, காந்திசிலை வளாகம் ஆகிய இடங்களில் கேமரா அமைக்கப் பட்டன. இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இந்த கேமரா, பழுதடைந்த நிலையில் காட்சிப் பொருளாக உள்ளது. 

இதனால் நகரில் நடக்கும், பல்வேறு திருட்டு சம்பவங்களை கண்டு பிடிப்பதில், போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நகரில் செயல்படும் ஒரு வங்கியில் கடந்த ஆண்டு நடந்த கொள்ளை முயற்சி சம்பவம், கண்காணிப்பு கேமரா பழுதடைந்ததால் குற்ற வாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் அவதிப்பட்டனர். 

கேமரா பயன்பாட்டில் இருந்தால் ஒரே நாளில் குற்ற வாளிகளை கைது செய்திருக்க முடியும்.
இதே போல் வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும், திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. குற்ற வாளிகளை உடனடியாக கண்டு

பிடிக்க முடியாமல் போலீசாரும் திணறு கின்றனர். தமிழக- கேரள எல்லைப் பகுதியில் வால்பாறை மலைப்பகுதி அமைந் துள்ளதால், மாவோயிஸ்ட்கள் இந்தப் பகுதியில் நடமாட அதிக அளவில் வாய்ப் புள்ளது.

குறைந்த அளவே போலீசார் பணியில் இருப்பதால், இரவு நேர ரோந்துப் பணிக்கு செல்ல முடியாமலும், குற்றவாளிகளை விசாரணை நடத்தவும், கைது செய்தவர்களை அழைத்துச் செல்ல முடியாத நிலையிலும் போலீசார் தவிக்கி ன்றனர்.

நகரில் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ள, சாலையோர ஆக்கிரமிப்பு வாகனங்களை கூட போலீசார் அப்புறப் படுத்துவ தில்லை.

போலீஸ் ஸ்டேஷனில் கேமரா இருந்தும், கடந்த ஆறு மாதங்களாக பயன் பாட்டுக்கு வராததால், நகரில் குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
இது குறித்து மாவட்ட ரூரல் எஸ்.பி., ரம்யா பாரதியிடம் கேட்ட போது, வால்பாறை உட்கோட்ட த்திற்கு உட்பட்ட அனைத்து போலீஸ் ஸ்டேஷன் களிலும் கண்காணிப்பு கேமரா விரைவில் பொருத்தப்படும். 

வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் பழுதடைந்த நிலையில் உள்ள கண்காணிப்புக் கேமரா உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

காற்றில் பறக்குது உத்தரவு

சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும், வால்பாறையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில், குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, 
மாவட்ட ரூரல் எஸ்.பி., உத்தரவின் பேரில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று கடந்த, ஆறு மாதங் களுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. 

ஆனால் ஒரு சில விடுதிகளில் மட்டுமே பொருத்தப் பட்டுள்ளது. மீதமுள்ள தங்கும் விடுதிகளில் இது வரை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வில்லை. மாவட்ட எஸ்.பி., யின் உத்தரவு காற்றில் பறக்கிறது.
Tags:
Privacy and cookie settings