கேரள மாநிலம், காசர்கோடு வட்டத் திலுள்ள கும்பளாவில் இருக்கிறது அனந்தபுரம். திருவனந்தபுரம் போலவே இங்கும் அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயில் அமைந்தி ருக்கிறது.
இந்தக் கோயில், இப்பகுதி மக்களுக்கு ரொம்பவே விசேஷம். கோயிலில் சுவாமிக்கு நைவேத்தியம் காண்பித்து முடித்ததும் முதல் பிரசாதம் இங்குள்ள முதலைக்குத் தான்.
பச்சைப் பசேலென பசுமைகட்டி நிற்கும் கேரளத்து வயல்கள் அங்கங்கே இருக்கும் ஆறுகள், சின்னச் சின்ன ஏரிகள் என இவை யெல்லாமே மனதுக்கு மிகவும் இனிமை யானவை.
இத்தனையும் கடந்து போனால் வருகின்றது அனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோயில்.
பிரசாதம் முதலைக்கு வழங்கும் கோயில்
தலவரலாறு:
வில்வ மங்கல சுவாமிகள் என்பவர், அனந்தப் புராவில் நாராயணனுக்கு பூஜைகள் செய்து தவவாழ்வு வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள், பேரழகுமிக்க ஒரு சிறுவன் அவரது நந்தவனத்தில் துள்ளி விளையாடிக் கொண்டி ருந்தான்.
ஆளரவமற்ற இந்த வனப்பகுதியில் இத்தனை பேரழகுடன் விளையாடிக் கொண்டி ருக்கும் சிறுவன் யாராக இருக்கும் என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது.
தன் உள்ளத்து எண்ணத்தைக் கேள்வியாக்கி அச் சிறுவனிடம் யாரென்று வினவினார்.
''நான் ஒரு அனாதை. என்னை கவனிக்க யாருமில்லை'' என்று கூறினான் அந்த சிறுவன். 'என்னோடு வா... நான் உன்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றேன்'' என அழைத்தார் சுவாமிகள் .
''உங்களுடன் வருகின்றேன். என்னை சிறிதளவே அவமானப் படுத்தினாலும், இங்கிருந்து கிளம்பி விடுவேன்" என்று பெரிதாக ஒரு நிபந்தனை விதித்தான் சிறுவன்.
மூர்த்தி சிறிதென் றாலும் கீர்த்தி பெரிதெனப் பேசும் சிறுவனின் பேச்சுக்குக் கட்டுப் பட்டவராக தன்னுடனே அழைத்துச் சென்று தனது வீட்டிலேயே வைத்து வளர்த்தார்.
தீராத விளையாட்டுப் பிள்ளையாக வளர்ந்த அந்த சிறுவன், ஒருநாள் பூஜைக்கு வைத்திருந்த பால் முழுவதையும் குடித்து விட்டான்.
இதனால் கோபமுற்ற சுவாமிகள் சிறுவனை கோபித்துக் கொண்டார்.
அந்தக் கணமே, ''இனிமேல் நீ என்னைக் காண வேண்டு மானால் அனந்த காட்டுக்குத் தான் வரவேண்டும்" என்று கூறி மறைந்தான் சிறுவன்.
உள்ளம் துடிதுடித்துப் போன வில்வமங்கல சுவாமிகள், சிறுவனை பல வித துன்பங் களுக்கு இடையேத் தேடி அனந்தபுர காட்டுக்கு வந்து சேர்ந்தார்.
அங்கே இலுப்பை மரத்தில் சிறுவனைக் கண்டு மகிழ்ந்தார். அடுத்த கணமே அங்கே நாராயணன் அனந்த சயனக் கோலத்தில் காட்சி தந்தார்.
இதுகாறும் தன்னுடன் வாழ்ந்தது, தன்னிடம் விளை யாடியது எல்லாமே ஶ்ரீமன் நாராயணன் தான் என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்து வணங்கி நின்றார்.
அந்த இடமே இப்போது ஆலயம் உள்ள இடமாகும். இது கிபி 8-ம் நூற்றாண்டில் கட்டப் பட்ட கோயிலாகும். இந்தக் கோயில் ஒரு ஏரியின் மத்தியில் இருக்கின்றது.
கேரளாவில் ஏரியின் நடுவில் இருக்கும் ஒரே கோயில் இது தான். இதில் இன்னொரு விசேஷம் என்ன வென்றால், இந்தக் கோயிலை கிட்டத் தட்ட பல ஆண்டுகளாக ஒரு முதலை காவல் காத்துக் கொண்டு வருகின்றது.
கோயிலில் சுவாமிக்கு நைவேத்தியம் காண்பித்து முடித்ததும் முதல் பிரசாதம் இங்குள்ள முதலைக்குத் தான்.
கோயில் குருக்கள் பிரசாதத் துடன் வந்து முதலையை அழைக்கிறார். முதலையும் ஏரியில் எங்கிருந் தாலும் இங்கு வந்து பிரசாதத்தைப் பெற்றுக் கொள்கின்றது.
கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:
பூஜை நேரங்கள்:
காலை: 7.30 மணி
பிற்பகல்: 12.30 மணி
இரவு : 7.30 மணி
முதலைக்கு பிரசாதம் கொடுக்கும் நேரம்:
காலை 8.00 மணி, பகல்: 12.00 மணி
எப்படிச் செல்வது?
கோயிலுக்குச் செல்ல விரும்புபவர்கள் காசர்கோடி லிருந்து கும்ப்ளே வரை ரயிலிலோ பஸ்சிலோ சென்று, அங்கிருந்து கார் அல்லது ஆட்டோவில் செல்லலாம்.