இராக், ஈரான், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்கள், அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் வகையில், ஜனாதிபதி டிரம்ப் நிர்வாக உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், இந்த உத்தரவை செல்லாதுஎன அறிவித்து, அமெரிக்க நீதிமன் றங்கள் அதற்கு தடை விதித்து விட்டன. இதை யடுத்து இந்தப் பட்டியலில் இருந்து இராக்கை மட்டும் நீக்கி விட்டு,
6 நாடுகளைச் சேர்ந்தவர் களுக்கு விசா வழங்கு வதை தற்காலிக மாக தடை செய்யும் புதிய நிர்வாக உத்தரவை டிரம்ப் பிறப்பித்தார்.
ஆனால், இந்த உத்தரவு நடை முறைக்கு வருவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, ஹவாய் நீதிமன்றம் அதற்கு தடை விதித்து விட்டது.
ஜனாதிபதியின் உத்தரவு முஸ்லிம் களுக்கு எதிராக பாரபட்சம் காட்டும் நடவடிக்கை என்றும், இது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்று ஹவாய் நீதிபதி டெரிக் வாட்சன் தமது உத்தரவில் குறிப்பிட் டுள்ளார்.