டெக் உலகம் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த S8 மற்றும் S8+ ஸ்மார்ட் போன்களை நேற்று அறிமுகப் படுத்தியது சாம்சங்.
கடந்த இரு மாதங்க ளாகவே இந்த ஸ்மார்ட் போன்களின் வடிவம் பற்றி புகைப் படங்கள் வெளியாகிக் கொண்டி ருந்த நிலையில் நியூயார்க்,
லண்டன் என இரண்டு இடங் களிலும் ஒரே நேரத்தில் ஸ்மார்ட் போன்களை அறிமுகப் படுத்தியது சாம்சங்
தனது வழக்கமாக வடிவமைப்பில் இருந்து சற்று அதிகமாகவே மாறுபட்டு S8 ஸ்மார்ட் போனை வடிவமை த்துள்ளது சாம்சங் நிறுவனம். அதே போல பல வசதிகளையும் புதிதாக அறிமுகப் படுத்தி யுள்ளது.
சாம்சங் S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போனின் சிறப்பம் சங்கள்:
5.8 இன்ச் OLED 2960 x 1440 (570 ppi)2K டிஸ்பிளே
கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி
குவால்காம் ஸ்நாப்டிராகன் 835 64பிட் ஆக்டாகோர் பிராசசர்.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி
12 மெகா பிக்ஸல் பின்புற மற்றும் 8 மெகா பிக்ஸல் முன்புற கேமரா.
3000 mAh பேட்டரி திறன் வயர்லெஸ் சார்ஜிங்.
IP68 நீர்புகாத்தன்மை யுடைய வடிவமைப்பு.
3.5 mm ஹெட்போன் ஜாக்.
ஆண்ட்ராய்டு 7 நொளகட் இயங்குதளம்.
ஒரே போல வடிவமைக் கப்பட்டிருந் தாலும் 6.2 இன்ச் டிஸ்பிளே மற்றும் 3500 mAh பேட்டரி மட்டும் S8+ ல் கூடுதல்.
இது வரை சாம்சங் ஸ்மார்ட் போன்களின் அடையாளமாக இருந்த அழுத்தும் வகையிலான பிஸிக்கல் ஹோம் பட்டன் இதில் இல்லை.
மூன்று பட்டன்களும் ஸ்கீரினிலேயேதான். கைரேகை, கருவிழி, முகம் எனப் பல வழிகளில் S8 ஸ்மார்ட் போன்களை அன்லாக் செய்யலாம்.
புளூடூத்தின் அடுத்த பதிப்பான Bluetooth v5.0 இந்த ஸ்மார்ட்போன் மூலம் அறிமுக மாகிறது.
வழக்கமான மொபைலை விட சற்று நீளமாகத் தெரிகிறது எஸ்8. இதன் வீடியோ ஆஸ்பெக்ட் ரேஷியா காரணமாக இருக்கலாம்.
18.2:9 ரேஷிதோ, வீடியோ பார்க்கும் அனுபவ த்தை பன்மடங்கு அதிகமாக்கி யிருக்கிறது எனலாம்.
சிறந்த கிராபிக் டெக்னாலஜி கொண்ட மொபைல் என்பதால், கேமிங் பிரியர்க ளுக்கு இது ஒரு சரியான சாய்ஸ் ஆக அமையும் என்கிறார்கள் மொபைல் எக்ஸ்பெர்ட்ஸ்.
ஆப்பிளின் சிரி போன்று வடி வமைக்கப் பட்டுள்ள "பிக்ஸ்பி" உங்களின் வாய்ஸ் கமெண்டு களுக்கு ஏற்ப வேலை செய்யும்.
ஏற்கெனவே 3.5mm ஹெட்போன் ஜாக் இல்லாமல் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 ஐ வெளியிட்ட போது வந்த அதிருப்தி காரணமாக உஷாரான சாம்சங் அதில் எந்த மாற்றமும் செய்ய வில்லை.
750 அமெரிக்க டாலர் விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ள இது ஏப்ரல் 21 முதல் விற்பனைக்கு வருகிறது.
நோட் 7 மாடல் தீப்பிடித் ததில் பிரச்னை,ஆப்பிளோடு காப்புரிமை பிரச்னைகள், தனது நிறுவன த்தின் துணைத் தலைவர் ஊழல் வழக்கில் கைது செய்ய ப்பட்டது முதல் கடந்த வருடம் சற்று தடுமாறியது சாம்சங்.
ஆனால் போட்டி யாளரான ஆப்பிளும் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்குப் பிறகு உருப்படி யாக எதையும் செய்வது மாதிரி தெரிய வில்லை என்பதால் புதிய வடிவமைப்பு,
புதிய வசதிகள் என களத்தில் இறங்கி யிருக்கிறது சாம்சங் வெற்றி பெறுமா S8 ன் விற்பனை பதில் கூறலாம்..
கொஞ்ச காலமாக நெட்டில் சாம்சங்கை கலாய்த்துத் தள்ளிய நெட்டிசன்ஸ், இந்த மாடலுக்கு நேற்று அமோக ஆதரவு அளித்து, பாசிட்டிவ் ட்வீட்களாக எழுதித் தள்ளியிருக் கிறார்கள்.