மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ள தே.மு.தி.க தலைவர் விஜய காந்த்தின் உடல் நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா விளக்கம் அளித் துள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மார்ச் 22-ம் தேதி நள்ளிரவு திடீரென சிகிச்சைக் காக மியாட் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
'வழக்கமான மருத்துவப் பரிசோதனை தான். பயப்படும் படியாக ஒன்றும் இல்லை' என்று தே.மு.தி.க சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டது.
இதனிடையே, அவரது உடல் நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வெளியிடப் படாத நிலை இருந்து வந்தது.
இந்நிலை யில், தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த், 'தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நலமாக உள்ளார். விரைவில் தேர்தல் பிரசாரத் துக்கு வருவார்.
ஆண்டு தோறும் மேற்கொள்ளும் பரிசோதனை க்காகவே அவர் மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்டு ள்ளார். தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும்' என்றார்.
முன்னதாக, நேற்று தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர் களிடம் பேசிய தே.மு.தி.க பொருளாளர் இளங்கோவன், 'விஜயகாந்த் நிச்சயம் பிரசாரம் செய்வார்.
அவரது பிரசாரத் திட்டம் குறித்து முடிவு செய்யப்பட வில்லை' என்றார்.