விபத்தை தவிர்க்க சாலை விதிகளை அறிவோம் !

உலகிலேயே இந்தியாவில் தான் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. சாலை விதிகளை மீறுவதால் தான் அதிகமான வாகன விபத்துக்கள் நடக்கிறது. 

விபத்தை தவிர்க்க சாலை விதிகளை அறிவோம் !
லைசென்ஸ் தகுதி இருந்தால் போதும் என்று நினைப்பதை விட வாகன அறிவும், சாலை விதிகளை அறிந்து 

அதற்கேற்ப செயல்ப ட்டால் விபத்து என்ற விதி நம்மை விட்டு ஓடி விடும் என்பதை உணர்ந்தால் தான் விபத்துக்கள் குறையும்.

சாலை விதிகள் சம்பந்தமாக நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை யான விஷயங்கள். 

நாம் எந்த வேலை காரணமாக வாகனத்தை பயன்படுத் தினாலும் முன்கூட்டி கிளம்பி செல்வதே பாதுகா ப்பானது, 

லேட்டாக கிளம்பி அவசரமாக வாகனத்தை இயக்குதல் என்பது விபத்திற்கே வழி காட்டுகிறோம். ஏதாவது பிரச்னை பற்றியோ அல்லது கற்பனை செய்தபடியோ வாகனம் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.

இரவு நேரங்களில் காரில் பயணம் செய்யும் போது பயணிகள் உள் விளக்கை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் 

அது டிரைவருக்கு முன் கண்ணா டியில் உங்கள் உருவம் தான் தெரியுமே தவிர சாலை சரியாக தெரியாது. 

வாகனத்தில் ஹெட் லைட் எரியாமல் இரவு நேரத்தில் செல்வது தவறு மற்றும் ஹெட் லைட்டில் 5 சென்டி மீட்டர் வட்டமாக கருப்பு நிற வண்ணம் பூசுவதால் 

விபத்தை தவிர்க்க சாலை விதிகளை அறிவோம் !
எதிர் வாகன ஓட்டிக்கு பார்வை பாதிக்காமல் ஓட்டுவதற்கு உதவும். பைக் ஒட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும்.

தேசிய சாலைகளில் நடப்பதற்கு, இருசக்கர வாகனங்களுக்கு என்று தனித்தனி வழி இருக்கும் அதனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பைக்கில் வேகமாக சென்று கொண்டிரு க்கும் போது 

திடீரென முன்சக்கர பிரேக்கை மட்டும் பிடிப்பதால் வாகனம் கவிழ்ந்து வாகன ஓட்டியை தூக்கி வீசி விடும், எனவே அவசர தேவைக்கு முன்பின் இரண்டு பிரேக்கையும் பிடிப்பதே சரியான தாகும்.

வாகனத்தை இயக்கும் போது ஒரே நேர்கோட்டில் செல்லுதல் வேண்டும் தேவைப் பட்டால் இன்டிகேட்டரை போட்டே திரும்புதல் வேண்டும். 

வேகமாக கட் அடித்து முந்தி செல்வதும், திடீரென இன்டிகேட்டரை போட்டு திரும்பு வதும் விபத்துக்கு வாய்ப்பாகும். 

அதே போல் வாகன இன்டிகேட்டரை போட்டு விட்டு திரும்பிய பின்பும் அதனை நிறுத்தாமல் சென்று கொண்டி ருந்தால் பின்னால் வரும் வாகனங் களுக்கு பெரிய இடைஞ்ச லாக இருக்கும்.
தேசிய சாலைகளில் நடுவில் இடைவெளி இல்லாமல் கோடு போட்டிருந்தால் அந்த இடங்களில் கடக்கும் போது ஓவர்டேக் செய்தல் கூடாது, 

அதே சமயம் சாலை நடுவில் கோடு விட்டு விட்டு இடை வெளியில் போட்டிருந்தால் அவ்விடங்களில் வாகனத்தை முந்தி செல்ல அனுமதிக் கப்பட்ட இடமாகும். 

சாலையின் ஓரத்தில் மஞ்சள்நிற பெயின்ட்டால் கோடுகள் போட்டிருந்தால் அங்கு பார்க்கிங் அனுமதி கிடையாது என்று அர்த்தமாகும். 

ஹைவேஸ் பயன் படுத்தும் போது வாகன பராமரிப்பு பணி செய்ய வேண்டி இருந்தால் அதற்கென ஒதுக்கப் பட்ட சர்வீஸ் ரோட்டை பயன்படுத்த வேண்டும்.

போக்குவரத்து போலீஸ் இருகைகளை தலை வரையில் நேராக தூக்கினால் அது விஐபி சல்யூட்டை குறிக்கும். 

விபத்தை தவிர்க்க சாலை விதிகளை அறிவோம் !
அவர் வலது கை முன்னே நீட்டி நிறுத்தல் குறியையும் இடது கையை இடதுபுறம் நீட்டி நிறுத்தல் குறியும் காட்டினால் அனைத்து பக்க வாகனங் களும் நிறுத்த வேண்டும் என்ற அர்த்தம் ஆகும்.

சாலை விதி என்பது நமக்காக உருவாக்கப்பட்டது என்பதை முதலில் ஏற்று க்கொள்ள வேண்டும். ஓட்டுபவர் செய்யும் தவறுக்கு அவருடன் பயணிப்ப வருக்கும் ஆபத்தை ஏற்படுத் துவது நியாய மில்லை. 

அதே போல் சரியான பாதையில் செல்லும் வாகனத்தின் குறுக்கே திடீரென சென்று விபத்தை ஏற்படுத்து பவரின் தவறுக்கு ஓட்டுபவர் பாதிப்பதும் நியாய மில்லை 

எனவே சாலை விதியை கடைபிடித்து நாமும் பாதுகாப்பாக செல்வோம் அனைவரையும் பாதுகாப்பாக செல்ல வைப்போம்.
Tags:
Privacy and cookie settings