இங்கிலாந்து மகாராணி இறந்தால் செய்ய வேண்டியது என்ன?

உலகின் மிக மூத்த அரசியான இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் இறந்தால் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை பல ஆண்டுகளாக அரச குடும்ப நிர்வாகத்தினர் ஒத்திகை பார்த்து வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது. 
இங்கிலாந்து மகாராணி இறந்தால் செய்ய வேண்டியது என்ன?
லண்டன் பிரிட்ஜ் ஈஸ் டவுன் என்ற குறிப்புச் சொல் முதல் கொண்டு, 10 நாள் இரங்கலு க்குத் தேவையான அனைத்து ஏற்பாடு களும் ஏறத்தாழ திட்டமிடப் பட்டுள்ள தாக சொல்லப் படுகிறது. 
இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் அரண்மனை முன், அதிகாரப்பூர்வ இணைய தளம் ஆகிய வற்றில் ஒட்டப்பட வேண்டிய நோட்டீஸ், ஊடகங்கள் இசைக்க வேண்டிய சோக கீத பட்டியல், 

சில உலக டிவி க்களின் செய்தி வாசிப் பாளர்கள் கறுப்பு நிற உடை அணிவது, கால் பந்தாட்ட மைதான ங்களில் இரங்கலுக்கு ஏற்பாடு செய்வது என முன்னரே திட்டமிடப் பட்டுள்ளதாம்.
இறுதிச் சடங்கின் போது அரண்மனை மணியில் தடிமனான துணியைக் கட்டி சத்தத்தை குறைத்து சோகத்தை உணரச் செய்வது, 50 லட்சம் பார்வை யாளர் களுக்கான ஏற்பாடு, 
10 ஆயிரம் விஐபிக் களுக்கான டிக்கெட் பிரின்ட் செய்வது, காமன் வெல்த் நாடுகளுக்கும், செய்தி நிறுவனங் களுக்கும் தகவல் அனுப்புவது என அனைத்துமே திட்ட மிடப்பட்டு விட்டதாகக் கூறப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings