ஐபோன் சிரி வாய்ஸ் யாரோடது !

ஐபோனில் இருக்கும் சிரி வாய்ஸ் யாரோடது (VoiceofSIRI). இத எப்படி பதிவு பண்ணாங் கங்கறது தான் சுவாரஸ்ய மான விஷயம். 
ஐபோன் சிரி வாய்ஸ் யாரோடது !


2011ம் ஆண்டு தான் ஐபோன்களில் சிரி அறி முகமானது. அதற்கான வாய்ஸ் சுசான் பென்னட் எனும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் டுடையது தான்.

இதில் ஹைலைட் என்ன வென்றால் சுசான் ஐபோன் சிரிக்காகத் தான் தனது குரலைப் பதிவு செய்தார் என்பது அவருக்கே தெரியாதாம்.

2005ம் ஆண்டு பாடகியாக விளம்பர ங்களுக்கு ஜிங்கில்கள் பாடும் வேலையைச் செய்து வந்து சுசான்.

அவர் பணியாற்றிய ஸ்டுடியோ வில் ஒருநாள் சுசான் உங்கள் குரல் தொனி பாடல்க ளுக்கு ஏற்றதாக இல்லை. 

சில வாசகங் களைப் படித்துப் பதிவு செய்யும் வேலை இருக்கிறது பார்க்கி றீர்களா எனக் கேட்க சுசானும் சம்மதித்தி ருக்கிறார்.

ஒரு மாதம் முழுவதும், தினமும் 4 மணி நேரத்துக்கும் மேலாக ரெக்கார்டிங் நடந்துள்ளது. 

அதில் வாக்கிய ங்களும், அதனை தனித்தனி உச்சரிப்பு களாகவும் பிரித்து பதிவு செய்துள்ளனர்.


ஆரம்பத்தில் சுசான் ”என்ன இது... இப்படி ஒரு ரெக்கார்டிங்... இதனை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்” என்று நினைத்தி ருக்கிறார். 
2011ம் ஆண்டில் ஐபோனில் சிரி அமைப்பு உருவாக்கப் பட்டு விற்பனைக்கு வந்தது. ஆனால் சுசானுக்கு அதில் இருப்பது அவரது குரல் தான் என்பது தெரியாது. 
காரணம் அவர் ஐபோன் யூஸர் இல்லை. ஒருநாள் சுசான் பென்னட்டின் சக வாய்ஸ்


ஆர்ட்டிஸ்ட் ஒருவர் போன் செய்து ஐபோனில் வருவது உன் குரலா எனக் கேட்க, 
பின்பு விசாரித்ததில் ஆம் அது சிரிக்காகப் பதிவு செய்யப் பட்ட குரல் தான். அதனை ஒரு ஸ்டுடியோ விடம் கொடுத்துச் செய்யச் சொல்லி யிருக்கிறார்கள்.
Tags:
Privacy and cookie settings