டிடர்ஜென்ட் சோப் நீல நிறத்தில் இருப்பது ஏன்?

நாம் தினந் தோறும் பயன் படுத்தும் ஒன்றென்ற போதிலும், இதைப் பற்றி நாம் ஒருபோதும் யோசித்தி ருக்கவே மாட்டோம். எல்லா டிடர்ஜென்ட் சோப்பும் நீல நிறத்தில் இருப்ப தற்கு என்ன காரணம்?


ரேஷன் கடையில் நாம் வாங்கிய கங்கா பார் தவிர அனைத்து டிடர்ஜென்ட் சோப்புகளும் நீல நிறத்தில் தான இருக்கின்றன. இதற்கு என்ன பெரிதாக காரணம் இருந்துவிட போகிறது.

அனைவரும் ஒரே சாயத்தையும், இரசாயனப் பொருளையும் தான் பயன்படுத்துகின்றனர் என்று தான் நாம் எண்ணுகிறோம்.

இருக்கலாம், ஆனால் வேறு சாயம் பயன்படுத்தலாமே, ஏன் நீலநிறம் மட்டும் பயன்படுத்துகின்றனர்.

இதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன. கேள்வி பதில் இணையமான கோரா (Quora)-வில் இது சார்ந்து பதிவு செய்யப்பட்ட சில பதில்கள் பற்றி இனிக் காணலாம்...

வியாபாரம்!

விளம்பர நிறுவனங்கள், தயாரிப்பு நிறவனங்கள் எப்போதுமே ஒரு பொருளை தயாரிக்கும் போதே அதை எப்படி விளம்பரப்படுத்த போகிறோம் என்பதை முடிவு செய்துவிடுவார்கள். விளம்பரம் என்பதும் ஒரு கலை தான்.

ஒரு மனிதரின் உணர்வு ரீதியாக, மனோரீதியாக தாக்கம் ஏற்படுத்துவது தான் விளம்பரம். இப்படி ஒரு தாக்கத்தை உண்டாக்காமல் ஒரு பொருளை டார்கெட் ஆடியன்ஸ் இடம் கொண்டு சேர்க்க முடியாது.

வண்ணங்கள்!

விளம்பரத்தில் முக்கிய பங்கு வகிப்பது வண்ண ங்களும், டிசைன்களும் தான். வண்ணம் மிக முக்கியமானது. ஆண்களு க்கான வண்ணங்கள், பெண்களு க்கான வண்ணங்கள்,

பொதுவாக ஒவ்வொரு பொருள், வகை, உணர்வு, ஈர்ப்பு சார்ந்த அனைத் திற்கும் தனிதனி வண்ணம் பயன் படுத்தப்படும்.


ஒவ்வொரு வண்ணதிற்கும் ஒரு உணர்வு, ஈர்ப்பு இருக்கிறது. சில வண்ணங்கள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தும்.

சுற்றுசூழலுக்கு ஒப்ப!

பச்சை மற்றும் நீலநிறம் எப்போதுமே இயற்கையுடன் ஒன்றிய வண்ணமாக தான் கருத்தில் கொள்கிறோம். மேலும், இவை சுற்றுசூழல் ஒப்ப இருக்கும் வண்ணமாகும்

இயற்கை!

நமது கை கழுவ, பாத்திரங்கள் கழுவ, நாம் பயன்படுத்தும் உடைகள் துவைக்க நாம் இயற்கையான பொருளை பயன்படுத்தி தான் வந்தோம் முந்தைய காலத்தில். பிறகு தான் இந்த சோப்புகள் வந்தன.

ஆதே இயற்கை எண்ணம் மக்கள் மனதில் இருக்க வேண்டும் என்பதாலும், இயற்கையான பொருளை தான் நாம் பயன்படுத்துகிறோம் என்ற தாக்கம் மனதில் ஆழ பதிய வேண்டும்

என்பதற்காகவும் தான் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் சோப்புகள் பச்சை மற்றும் நீலநிறத்தில் தயாரிக்கப்படுகின்றன.

வண்ணத்தில் எதுவும் இல்லை!


நீங்கள் எந்த வண்ணத்தில் இருக்கும் சோப்பை பயன் படுத்தினாலும் அது ஒரே மாதிரி தான் சுத்தம் செய்யும்.

ஏனெனில் நீங்கள் கடையில் வாங்கும் எல்லா சோப்பிலும் ஒரே இரசாயனம் தான் இருக்கிறது, சாயம் மற்றும் நறுமண உட்பொருட்கள் தான் மாற்றப் படுகின்றன.

இயற்கை தயாரிப்புகள்!

உண்மையில், இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் பொருட்களில் பெரிதாக வண்ணத்தின் தாக்கமும், நறுமணம் இருக்காது.

பளிச் வண்ண கலப்பு இருந்தாலும், நல்ல வாசனை இருந்தாலும் தான் நாம் வாங்குவோம். முக்கியமாக அதை யாரேனும் பிரபலம் கூவி, கூவி டிவியில் விற்கவேண்டும்.
Tags:
Privacy and cookie settings