புறா ஒன்று ஐந்து நாட்களில் 1000 கிலோ மீட்டர் தூரம் கடந்துள்ளது. அந்தப் புறாவுக்கு, ‛திருச்சி ராணி’ எனும் பட்டம் வழங்கிக் கொண்டாடி மகிழ்கின்றனர் திருச்சி வாசிகள்.
இது 27 வருடங் களுக்குப் பிறகு நடந்த சாதனை எனச் சொல்லி மெய் சிலிர்க் கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை, திருச்சி ரேசிங் பீஜியன்ஸ் கிளப் சார்பில் புறா ரேஸ் நடத்துவது வழக்கம்.
ஒவ்வொரு வருடமும், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை, திருச்சி ரேசிங் பீஜியன்ஸ் கிளப் சார்பில் புறா ரேஸ் நடத்துவது வழக்கம்.
அப்படித் தான் பந்தய புறாக்களை, வழக்கம் போல வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, கிளம் பினார்கள் திருச்சி ரேசிங் பீஜியன்ஸ் கிளப் உறுப்பி னர்கள்.
7 நாட்களில் 1000 கிலோ மீட்டரைக் கடந்து, வளர்ப்பவர் வீட்டுக்கு முதலில் வரும் புறா வெற்றி பெற்றதாக அறிவிப் பார்கள்.
அந்த வகையில் திருச்சியில் இருந்து கொண்டு செல்லப் பட்ட புறாக்கள், கடந்த மார்ச் 12-ம் தேதி மகாரஷ்டிரா மாநிலம், பல்ஹர்ஷா எனும் ஊரில் இருந்து பறக்க விடப்பட்டன.
பந்தய தூரம் மிகத் தொலைவு என்பதால், கடந்த 27 வருடங் களாக திருச்சியில் இருந்து விடப் பட்ட எந்தப் புறாவும் ஜெயிக்க வில்லை. இப்படி இருக்க, 7 நாட்கள் கடக்க வேண்டிய 1000 கி.மீ தூரத்தை,
ஐந்தே நாட்களில் கடந்து திருச்சி ராணி எனும் பட்டத்தை வென்றுள்ளது திருச்சி ஶ்ரீரங்கம் ஆர்.எஸ் சாலையைச் சேர்ந்த ஆறுமுக அருள் குமரனின் புறா.
இந்த வெற்றியை, திருச்சி ரேசிங் பீஜியன்ஸ் கிளப் உறுப்பினர்கள், பந்தய புறா வளர்ப்பவர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
அருள் குமரனை நேரில் சந்தித்தோம்.
“எங்க அப்பா, பறவைகள் மீது ரொம்ப பிரியமாக இருப்பார். அதனால் எனக்கும் அந்தப் பழக்கம் வந்தது.
வடக்கு வாசலைச் சேர்ந்த என் நண்பன் ஶ்ரீதர், வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம், அவனைப் போலவே புறா வளர்க்கணும்னு நினைப்பேன்.
படித்ததால் அந்த ஆசை, பல வருடங்கள் தள்ளிப் போனது. கல்லூரி படிப்பை முடித்த நான், ஸ்மார்ட் ஆட் எனும் இவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஆரம்பித்து நடத்தி வருகின்றேன்.
இதனால் கடந்த 5 வருடத் துக்கு முன்னாள், ஆர்வத்தோடு 5 ஜோடி சாதாரண புறாக் களை வாங்கி வளர்க்க ஆரம் பித்தேன். அடுத்து பந்தய புறாக்கள் வளர்ப்பில் கவனம் செலுத்தினேன்.
புறாக்களுக்கு, தினமும் காலையும் மாலையும் கம்பு, திணை, சோளம், கோதுமை என தானியங்கள் உணவளிக்க வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு மாதமும், 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை செலவானது. கொஞ்சம் சிரமப் பட்டாலும், கவலைப் படவில்லை. புறாக்கள் பெருகி, இப்போது 100 புறாக்களுக்கு மேல் உள்ளது.
புறாக்களைத் தூது விடுவது நமது பழைய பாரம்பர்யம், இப்போது, புறா இனங்களை காப்பாற்றிட இது போன்ற புறா பந்தயங்கள் நடத்தப் படுகிறது.
ஒரு புறா நமது வீட்டுக்கு மேல் அரை மணி நேரம் பறந்தால், அது பந்தய த்துக்கு தகுதி யான புறா.
அடுத்து புறாவை மெல்ல மெல்ல, 100, 200 என பல்வேறு வகையி லான கிலோ மீட்டர் தூரங்களில் விட்டால், நமது வீட்டுக்கு வந்து விடும்படி பயிற்சி மேற் கொண்டோம்.
அடுத்து 500, 650 கிலோ மீட்டர் தூரங்களை ஒரு புறா கடந்தால் அது 1000 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியான புறா.
ஒவ்வொரு போட்டியின் போதும், நாம் வளர்க்கும் 5 பந்தய புறாக்களை, கிளப்பில் கொடுக்க வேண்டும்.
அந்தப் புறாக்கள், பந்தய தூரத்தைக் கடந்து வீட்டுக்கு வந்து சேர்ந்த வுடன், உடனே கிளப்புக்கு தகவல் கொடுக்க வேண்டும். அப்படி முதலில் வந்த புறா ஜெயித்த தாக அர்த்தம்.
அப்படித் தான் இந்தப் புறா முதலில் வெற்றி பெற்றது. இதே போல், என் இன்னொரு புறா, 1000 கி.மீட்டரை 7 நாள் கழித்து கடந்து வந்தது. மற்ற புறாக்கள் வரவே இல்லை.
இப்படியான போட்டி களில் கலந்து கொள்ளும், புறாக்கள் பல தடைகள் இருக்கும். காற்று பலமாக வீசினால், புறா பறக்கும் திசை மாறலாம்,
அதே போல், வெயில் அதிகமாக இருந்தாலோ, காற்றா லைகள், வேட்டைக் காரர்கள் விரித்த வலைகள், ஏவுகணைகள் அனுப்பும் போது, பறவைகள் வந்து விடக் கூடாது என ரசாயனக் கலவை தூவு வார்கள்.
அந்தப் பவுடர் பட்டாலோ, வயல் வெளிகளில் மருந்துகள் தெளித்தி ருந்தாலோ இவை பறவை களை பாதிக்கும்.
இப்படியான பத்துக்கும் மேற்பட்ட தடைகளைக் கடந்து, உரிய நேரங்களில் வந்து சேரும் புறா வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளப் படும்.
கடந்த 27 வருடங் களுக்குப் பிறகு, பந்தய நாட்களை விட இரண்டு நாட்கள் முன்ன தாகவே வந்து, என் புறா, எனக்குப் பெருமை தேடிக் கொடுத் துள்ளது” என்றார் மெய்சிலிர்க் கிறார் அருள்.
புறா வளர்ப்பின் மூலம் திருச்சிக்கு பெருமை சேர்த்த அருள் குமரனுக்கும் , திருச்சி ராணிக்கும் வாழ்த்துச் சொல்லி விடை பெற்றோம்.