குப்பையை வீதியில் எறிந்த 1,100 பேருக்கு அபராதம் !

1 minute read
ராஸ் அல் கைமா பொதுப்பணித் துறையின் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் குப்பைகளை சகட்டு மேனிக்கு வீதியில் எறிந்த சுமார் 1,100 பேர் மீது அபராதம் விதித்துள்ளனர்.
குப்பையை வீதியில் எறிந்த 1,100 பேருக்கு அபராதம் !
இந்த சோதனைகள் அல் ரம்ஸ், அல் முவைரீத் மற்றும் நகரின் தென்புறப் பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டு நகரின் தூய்மை பாது காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பொது சாலைகள், பூங்காக்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள் போன்ற 9 இடங்களில் குப்பைகள் அதிகம் எறியப் படுவதாகவும், 

இத்தகைய செயலில் ஈடுபடுவோர் குறித்து தெரிவிக்க 8008118 என்ற இலவச எண்ணை பயன் படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

அதே போல் ஜெபல் அல் ஜைஸ் மற்றும் கடற்கரை பகுதிகளில் போக்கு வரத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது உடனடியாக 500 திர்ஹம் அபராதம் விதிக்கப் படும் என்றும் 
விரைவில் ராஸ் அல் கைமாவில் 38 இடங்களில் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப் படவுள்ள தாகவும் 

இதற்கான மின்சக்தி சூரியஒளி தகடுகள் மூலம் பெறப்படும் என்றும் ராஸ் அல் கைமா போக்குவரத்துத் துறையின் துணை இயக்குனர் யூசுப் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings