ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்குச் சொந்த மான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி, காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டார்.
இதை யடுத்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வந்த நிலையில், முக்கிய குற்ற வாளியாகக் கருதப் பட்ட கனகராஜ் விபத்தில் உயி ரிழந்தார். மேலும், அவரின் நண்பர் சயான், மற்றொரு விபத்தில் காயமடை ந்தார்.
இதில், அவரது மனைவி மற்றும் மகள் உயிரி ழந்தனர். இதை யடுத்து கொலை வழக்கில் தொடர் புடைய நான்கு பேரை நேற்று காவல் துறையினர் கைது செய்தனர்.
ஜெயலலிதா, சசிகலா அவரிகளின் அறைகளை உடைத்து மதிப்பு மிக்க பொருளைத் அவர்கள் திருடிச் சென்ற தாக கூறப் பட்டது.
இந்நிலை யில், காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
மலப்புரம் பகுதியில் ஜித்தீன், சம்சீர் அலி ஆகி யோரை தமிழக காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விபத்தில் மரண மடைந்த சயானின் மனைவி மற்றும் மகள் கொலை செய்யப்பட வில்லை என பிரேத பரிசோதனை யில் தெரிய வந்துள்ளது.
திருச்சூர் மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் இருவரின் உடல்களும் உறவினர் களிடம் ஒப்படை க்கபட்டு ள்ளன.
இதனிடையே கோவை மருத்துவ மனையில் சயானிடம் விசாரணை மேற் கொண்டு வருகிறார் பாலக்காடு எஸ்.ஐ சசி.