புதிய டிரைவர்களுக்கு 2 வருட லைசென்ஸ் மட்டுமே !

அமீரகத்தில் துபாய் புதிய போக்குவரத்து சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் பிறப்பிக்கப் பட்டுள்ளன. இதன் படி, எதிர்வரும் 2017 ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிதாக லைசென்ஸ் எடுக்கும்.
புதிய டிரைவர்களுக்கு 2 வருட லைசென்ஸ் மட்டுமே !
அனைத்து டிரைவர் களுக்கும் 2 வருட லைசென்ஸ் மட்டுமே வழங்கப் படும். அமீரகத்தை சேர்ந்தவர் களுக்கு மட்டும் ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒரு முறையும், 

வெளி நாட்டவர்களு க்கு 5 வருடத்திற்கு ஒருமுறையும் புதுப்பிக்கப் படும் என்றாலும் ஏற்கனவே நடைமுறை யிலுள்ள சட்டத்தின் படி லைசென்ஸ் பெற்றவர் களுக்கு மட்டும் அடுத்த புதுப்பித்தல் தேதி வரை பழைய நடை முறையே செல்லும்.

அமீரக தேசிய போக்கு வரத்து சபை (Federal Traffic Council) வழங்கும் அறிவுரை க்கேற்ப குறிப்பிட்ட சில வகைகளின் வருபவர் களுக்கு மட்டும் ஒரு வருடத் திற்கு 

அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கோ லைசென்ஸ் வழங்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது என்றாலும் 'அந்த குறிப்பிட்ட வகையினர் யார்' என்பது குறித்து செய்தித் தாள்களில் விபர மில்லை.

அதே போல் நாள் பட்ட தீராத வியாதி யஸ்தர்கள், வலிப்பு நோய், கடும் நீரிழிவு உள்ளவர் களுக்கும் லைசென்ஸ் முற்றிலும் வழங்கப் படாது. 
மேலும் சுகாதாரத் துறையுடன் இணைக்கப் பட்டுள்ள கணிணி வழித் தொடர்பு மூலம் இத்தகைய டிரைவர் களின் உடல்நலம் குறித்த தகவல்கள் பெறப்படும்.

குடியிருப்புப் பகுதிகளில் இயக்கப் படும் வாகனங்கள் 40 km/ph வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். 

வாகனங்கள் அதிக சப்தம் எழுப்பவும் மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்களின் அருகில் செல்லும் பாதசாரி களை அச்சுறுத்தும் வகையில் இயக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

பஸ்களுக்கு என தனி தடம் மற்றும் நேரத்தை ஒதுக்கித் தருவது குறித்தும் ஆலோசிக் கப்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பாலைவன பைக் உட்பட அனைத்தும் கட்டாய பதிவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. 

மேலும் இத்தகைய வாகனங்களை மணல் மற்றும் பாலை வெளிகளில் மட்டுமே இயக்க வேண்டும். 

10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே வாகனங் களில் முன்பக்கம் அமரவும், கட்டாயம் பாதுகாப்பு பெல்ட் அணியவும் உத்தர விடப் பட்டுள்ளது.
வாகனங் களின் முன்பக்கம் அமரும் பெரியவர் களோ, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை களோ பாதுகாப்பு பெல்ட் அணியத் தவறினால் 

டிரைவர் மீது 400 திர்ஹம் அபராதமும் 4 கரும் புள்ளிகளும் விதிக்கப் படும் என்பது போன்ற பல புதிய சட்டங்கள் பிறப்பிக்கப் பட்டுள்ளன.
Tags:
Privacy and cookie settings