3,700 ஆண்டு முந்தைய பிரமிட் எகிப்தில் கண்டுபிடிப்பு !

சுமார் 3,700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரமிட் ஒன்றின் எஞ்சிய பாகங்கள் எகிப்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தெற்கு கெய்ரோவின் தஹ்ஷுர் அரச கல்லறையில் நிலவறைக் கூடம் 
3,700 ஆண்டு முந்தைய பிரமிட் எகிப்தில் கண்டுபிடிப்பு !

மற்றும் பழங்கால எகிப்திய சித்திர எழுத்துகள் கொண்ட தடுப்பு ஆகிவை கண்டு பிடிக்கப் பட்டிரு க்கும் புதிய பிரமிட்டில் அடங்கும். 


கண்டு பிடிக்கப் பட்டிருக்கும் பண்டைய பொருட்கள் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்த எகிப்து தொல்பொருள் அமைச்சு 

மேலும் கண்டு பிடிப்புகளை மேற்கொ ள்ளவும், பிரமிட்டின் அளவை கணிக் கவும் தொடர்ந்து அகழ்வு மேற்கொள்ளப் படுவதாக குறிப் பிட்டது. 13ஆவது பாரோ வம்சத்தால் இந்த பிரமிட் கட்டப் பட்டிருப்பதாக நம்பப் படுகிறது. 

நான்காவது வம்சத்தைச் சேர்ந்த ஸ்னப்ரு மன்னர் கட்டிய எகிப்தின் முதலாவது தெளிவான கூம்பு வடிவ பிரமிட் தஹ்ஷுரி லேயே அமைந் துள்ளது.

341 அடி உயரம் கொண்ட ரெட் பிரமிட் என அழைக்கப் படும் இது 4,600 ஆண்டுக ளுக்கு முன்னர் அமைக் கப்பட்ட தாகும்.

இந்த மன்னரே முன்னதாக 105 மீற்றர் உயரம் கொண்ட வளைவு பிரமிட் டையும் கட்டி இருந்தார். பிரமிட் கட்டு மானத்தின் பாதியில் அது 54 டிகிரியில் இருந்து 43 டிகிரியாக கோணம் மாற்றப் பட்டது.


ஸ்னப்ருவு க்கு அடுத்து வந்த அவரது குபு 138 மீற்றர் உயரம் கொண்ட பண்டைய உலக அதிசயங் களில் ஒன்றான கிசா பிரமிட்டை அமைத்தார்.
Tags:
Privacy and cookie settings