பார்வை என்பது ஒரு குறையில்லை சாதித்த பெண் !

இந்தப் பெண்ணை இதற்கு முன் எங்காவது பார்த்தது போல இருக்கிறதா? ஒருவேளை தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட் பார்ம்களில் நீங்களோ நானோ இவர்களைப் பார்த்திருக்கலாம் .
பார்வை என்பது ஒரு குறையில்லை சாதித்த பெண் !
கணவனும் மனைவியுமாக தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம்களில் கடலை மிட்டாய் விற்பது தான் இவர்கள் தொழில்.

சில நேரங்களில் மிட்டாய் வியாபாரத்தில் பற்றாக்குறை ஏற்படும் போது , கை நீட்டி பிச்சை எடுக்கவும் இந்தப் பெண் தயங்குவ தில்லை.

காரணம் .. இந்த பார்வையற்ற தம்பதி களுக்கு இரண்டு குழந்தைகள் இருக் கிறார்கள்.

பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டே அம்மா பாடம் சொல்லிக் கொடுக்க , தன் தாயின் மீது சாய்ந்தபடி பாடம் படிப்பாள் இந்த மகள்.
.
நீண்ட நாட்களாக இவர்களை அடிக்கடி கவனித்தபடி கடந்து போயிருக்கிறார் ஒரு மனிதர் ; அவர் பெயர் சந்தானம் .

அவர் இந்தப் பார்வையற்ற பெண் ,தன் மகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அழகை கண்டு ஆச்சரியப்பட்டு போய் இருக்கிறார் .

ஒருநாள் அந்தப் பெண்ணின் அருகே சென்று அழைத்திருக்கிறார் : “அம்மா..”

யாரோ பிச்சை போட அழைக்கிறார்கள் என அந்தப் பெண் திரும்ப ,

திரு. சந்தானம் அவளிடம் கேட்ட கேள்வி : “நீ எதுவரைக்கும்மா படிச்சிருக்கே..?”
அதற்கு அந்தப் பெண் சொன்ன பதில் : “ பி.ஏ ..பி.எட் ..”

அதிர்ந்து போய் விட்டார் திரு. சந்தானம். “என்னம்மா சொல்றே..?”

“ஆமா ஸார்... இப்போ எம்.ஏ. கரஸ்பாண்டன்ஸ்ல படிக்கிறேன்..”

திகைப்பு நீங்காத திரு. சந்தானம் கேட்டார் : “ எப்படி இவ்வளவு வரைக்கும் படிச்சே ..?”

அந்தப் பெண் சொன்னார் : “ என் கணவர் தான் ஸார் என்னை படிக்க வைச்சார் . 2004-ல் கல்யாணம் செய்துகிட்டோம் . ஒரு வருஷத்துல பையனும், ரெண்டு வருஷம் கழிச்சு பொண்ணும் பிறந்தாங்க.. 

கல்யாணம், குழந்தைனு சந்தோஷமான குடும்பம் அமைஞ்சாலும், பணக் கஷ்டம் எங்களை துரத்திட்டே இருந்துச்சு.

ரயில்ல மிட்டாய் விக்கிற இந்த வேலையில, சில சமயம் சுத்தமா வியாபாரம் இருக்காது. இந்த சமயத்தில் தான் என் கணவர், ‘இப்படியே போனா நம் வாழ்க்கை மோசமாத் தான் இருக்கும். நீ படிக்கணும் ... 
நம்ம பிள்ளைங் களுக்காகவது நீ படிக்கத்தான் வேணும்’னு சொல்லி, 2009-ல அண்ணாமலை பல்கலைக் கழகத்துல என்னை பி.ஏ., தமிழ் படிக்க சேர்த்து விட்டார். 2012-ல பி.ஏ முடிச்சதோட, 2013-ல பி.எட் முடிச்சேன்.”
.
“இவ்வளவு படிச்சும் வேலைக்கு போகாம ..”

“என்ன ஸார் செய்யறது..? வேலை கேட்டு போற இடங்களில் எல்லாம், பார்வை யில்லைனு திருப்பி அனுப்பிடுவாங்க ..”
.
இதைக் கேள்விப்பட்ட திரு. சந்தானம் தன் நண்பர்களிடம் எல்லாம் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ள ... 

அந்த நல்ல நண்பர்களும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இதை சொல்ல .. அப்படியே இது திரு. சுஜீத் என்ற நண்பருக்கு தெரிய வர ...
.
ஒரு நாள் செங்கல்பட்டில் உள்ள மஹிந்திரா வேர்ல்டு ஸ்கூலுக்கு இந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு போனார் திரு. சுஜீத்.
.
அந்தப் பள்ளி தலைமை ஆசிரியை கேட்டார் : “உன் பெயர் என்னம்மா..?”
“என் பெயர் சுகுணா !”

அடுத்து... சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் , இந்த பார்வையற்ற பெண்ணிடம் இண்டர்வியூ செய்தார் அந்த தலைமை ஆசிரியை .
.
அப்புறம் நடந்ததை சுகுணாவே சொல்கிறார் : “பள்ளித் தலைமை ஆசிரியை நிர்மலா மேடம் கேட்ட கேள்விகளுக்கு தன்னம்பி க்கையோட பதில் சொன்னேன்.

‘என்ன சம்பளம் வேணும்?’னு கேட்டாங்க.

தயங்கினபடியே 15,000னு சொன்னேன்.

அவங்க 18,500 சம்பளம் நிர்ணயிச்சு, என்னை அவங்க பள்ளியில் தமிழ் ஆசிரியை பணிக்குச் சேர்த்துக்கிட்டாங்க!’’
.
கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது...!

அந்த பெண்ணின் இரு குழந்தைகளும் கூட அதே ஸ்கூலில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
..
இதோ ... இங்கே நான் பகிர்ந்திருக்கும் இது ஒன்றும் புதிய செய்தி அல்ல..!

கடந்த வருடம் நடந்தது இது..!.
பார்வை என்பது ஒரு குறையில்லை சாதித்த பெண் !
சுகுணாவுக்கு மட்டும் அல்ல... என்னைப் போன்ற பலருக்கும் ஒரு பார்வைக் கோளாறு இருக்கிறது..!

அது...

நல்ல விஷயங்கள் ஏனோ நம் கண்ணில் அவ்வளவு சீக்கிரம் படுவதே யில்லை.!
.
வாழ்க சுகுணாவும் அவர் குடும்பமும்..!

வாழ்க அந்த நல்ல நண்பர்கள் திரு. சந்தானம் , திரு.சுஜீத்...இன்னும் பல நல்ல உள்ளங்களும் ..!!
.
# “மேகங்கள் போல் இருந்து
ஊருக்கு நீர் கொடுங்கள்

மரங்களை போல் வளர்ந்து

யாருக்கும் நிழல் கொடுங்கள்..!”

வாழ்க வளமுடன்..!

- Vallam John…
Tags:
Privacy and cookie settings