முஸ்லிம்களின் தொழுகைக்கான அதான் அழைப்பை ரிமிக்ஸ் பாடலாக பயன்படுத்திய துனிஷிய நாட்டு இரவு களியாட்ட விடுதி ஒன்று மூடப்பட் டுள்ளது.
வட கிழக்கு நகரான நபியுலில் விழா ஒன்றில் பயன் படுத்தப்பட்ட இந்த ரிமிக்ஸ் பாடல் சமூக ஊடகங் களில் வெளியானதை அடுத்து கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த அறிவிப்பு வரும்வரை அந்த இரவு விடுதி மூடப்படுமென நபியுல் ஆளுனர் அறிவித்துள்ளார். சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
வீடியோ காட்சியில் இரவு நடன நிகழ்ச்சியின் போது இரு ஐரோப்பிய டி.ஜே கலைஞர்கள், தொழுகை அழைப்பின் நடன பதிப்பு என்று கூறியே அதான் இசையாக ஒலிக்கப் பட்டுள்ளது.
நல்லொழுக் கத்தை மீறியது மற்றும் மக்களிடம் சீற்றத்தை ஏற்படுத்திய குற்றச் சாட்டில் இரவு களியாட்ட விடுதியின் முகாமை யாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.
இந்த அதான் இசையை பயன்படுத்திய டி.ஜே கலைஞர் தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.