இது எல்லாம் தமிழனுடையது ஆனால் !

இதை படித்து சிந்திங்கள்...... நண்பர்களே ! தமிழா தமிழா சற்று சிந்தித்து பார்...
இது எல்லாம் தமிழனுடையது ஆனால் !
கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது...

வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது...

காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது...

முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது...

பாலாறு உன்னுடையது ஆனால் அதிலிருந்து நீரைப் பெற முடியாது...

நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு...

இராசராசன் கட்டிய பெரிய கோவில் உன்னுடையது... ஆனால் தமிழில் வழிபட முடியாது...

நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது... ஆனால் தமிழில் வழக்காட முடியாது...

அரசுப் பள்ளிகள் உன்னுடையது ... ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது...

தமிழ்நாடு உன்னுடையது ஆனால் தமிழர் ஆள முடியாது 

சிந்தியுங்கள் மக்களே... இதப் படிச்சுப் பாருங்க... Pls pls pls...

தேவை இல்லாதத எல்லாம் fb,whatsapp ல ஷேர் பண்றோம்... ஆனா இதப் பத்தி நாம ஏன் பேசுறதில்ல...

கத்தி படத்துல சொல்லும் போது கூட நான் நம்பல... ஆனா இப்ப நெட்ல
தேடினேன்... ஏகப்பட்ட விவரம் இருக்கு... இத எப்படி? நிறுத்துறது...

நம்ம வீட்ல ஒரு உயிர் போனா தான் நமக்கு அந்த கஷ்டம் புரியுமா? மீடியா ஏன் இதப் பத்தி பேசல... 

சமீபத்துல டில்லியில நடந்த விவசாயி தற்கொலை பத்தி கூட ரெண்டு நாள் பேசிட்டு அப்படியே விட்டுட்டாங்க...
ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி சாகுறாங்களாம்...

சராசரியா வருசத்துக்கு 15,459 விவசாயிகள் தற்கொலை செய்திருக்காங்க...

இதப் படிச்சிட்டு சும்மா விடாதீங்க guys... Pls ஷேர் பண்ணுங்க உங்களுக்குத் தெரிஞ்ச க்ரூப் எல்லாத்துலயும் ஷேர் பண்ணுங்க...

குறைஞ்சது 1000 பேர் இதப் படிப்பாங்க... விவசாயிங்க கஷ்டத்தப் புரிஞ்சுப்பாங்க...

நாம இப்பவே ஏதாவது செஞ்சா தான் நாளைக்கு நம்ம பசங்க சாப்பிட முடியும்... விவசாய இனமே அழிஞ்சு போனா நம்ம நாட்டில என்ன மிஞ்சும்?

கொஞ்சம் வருங்காலத்தையும், விவசாயிங்க நிகழ்காலத்தையும் யோசிச்சுப் பாருங்க...

நாமல்லாம் இவ்வளவு நாள் வாட்சப், பேஸ்புக்கில இருந்து என்ன தான் சாதிச்சோம்?

இது விவசாயிகள் சம்மந்தப்பட்ட சேதி இல்லை... நம்மளப் பத்தினது கொஞ்சம்‬ யோசிச்சிப் பாருங்க...

விவசாயத்தை நேசித்தால் பகிருங்கள்.
Tags:
Privacy and cookie settings