இன்றைய பரபரப் பான சூழ்நிலையில், தெரிந்தவர் எதிரில் வந்தாலே, நல்லா இருக் கீங்களா?” என்று கேட்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
அப்படி இருக்கும் போது, ஓர் அவசரத் தேவையின் போது, யார் என்றே தெரியாத ஒருவர் உதவுவது எவ்வளவு பெரிய விஷயம்!
அப்படி ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை ஆட்டோ டிரைவர் மூலமாகப் பெற்றிருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பாடகி வரிஜாஸ்ரீ வேணுகோபால்.
நான் யார்... எங்கே இருக்கிறேன், என்ன வேலை பார்க்கிறேன் என்கிற எந்த விதத் தகவலும் தெரியாமலே,
என் அவசரமான சூழ்நிலையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் 3000 ரூபாய் கொடுத்து உதவினார் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் வரிஜாஸ்ரீ வேணு கோபால்.
அந்த போஸ்டுக்கு 'வாவ் வாட் ய மேன்' 'யூ லக்கி பேபி', என்று கமென்டுகள் நிறைய வரிஜாவின் போஸ்ட் அதிக ஷேர் செய்யப் பட்டது.
அட! இது நல்ல விஷயமா இருக்கே என்று தொலை பேசியில் அவருடன் பேசினோம். நடந்த நிகழ்வைப் பற்றி கேட்கும் போதே நெகிழ்ந்து போனார் வரிஜாஶ்ரீ.
நான் பெங்களூர் வாசி. பாடகியான நான் இத்தாலியில் ஒரு மியூசிக் ஷோ பண்ணப் போறேன்.
அதுக்கான விசா இன்டர்வியூ ஏப்ரல் 11-ம் தேதிவரிஜாஸ்ரீ ஹைதராபாத்தில் நடந்தது. விசா இன்டர்வியூ வுக்கு 5000 ரூபாய் ஆகும்னும், கிரெடிட், டெபிட் கார்டுகளை ஏத்துக்க மாட்டாங் கன்னும் தெரியும்.
கையில 2000 மட்டும் தான் இருந்தது. சரி ஏடிஎம்ல எடுத்துக் கிடலாம்னு கிளம் பிட்டேன். என்கிட்ட இருந்த பணத்தை வைச்சுக் கிட்டு ஹைதரபாத் போய்ட்டேன். அங்கிருந்து நேரா விசா ஆபீஸுக்கு கிளம்பினேன்.
டாக்சி பிடிக்கவும் நேரம் இல்லாம கிடைச்ச ஆட்டோவில் ஏறினேன். போற வழியில் பத்து, பதினைஞ்சு ஏ.டி.ஏம் மையங்களில் முயற்சி பண்ணினேன்.
எங்கேயும் வொர்க் ஆகலை. நொந்து போய், ‘ஸ்வைப் மிஷின்' இருக்கும் கடைகளில் ஏறி இறங்கி, ‘எனக்கு அவசரமா 3000 ரூபாய் ’ஸ்வைப்’ பண்ணிக் கொடுங்க’ன்னு கேட்டேன்.
ஆனா, யாரும் உதவ முன்வரலை. இதை யெல்லாம் பார்த்துட்டு இருந்த நான் டிராவல் பண்ணின ஆட்டோ டிரைவர், “என்கிட்ட 3000 ரூபாய் இருக்கு.
உங்க விசா இன்டர் வியூவை நல்ல படியா முடிங்க. உங்க ஹோட்ட லுக்கு திரும்பின பிறகு பணத்தைக் கொடுங்க'னு சொல்லி உதவினார்.
அதுக்கு அப்புறம், விசா இன்டர் வியூவை முடிச்சுட்டு அவருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன். அவர் பேர் பாபா. இந்த உலகம் இன்னமும் உயிர்ப்போடு இருக்க இது போன்ற மனிதர்கள் தான் காரணம்.
கைமாறு எதையும் எதிர் பார்க்காமல் சமய த்தில் உதவின அவருக்கு நன்றி சொல்லவே அவரோடு செல்ஃபி எடுத்து, ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணிக் கிட்டேன்.” என்று நெகிழ்கிறார் வரிஜாஸ்ரீ.
இந்த சம்பவ த்தை, வரிஜாஸ்ரீ ஃபேஸ்புக்கில் பதிவிட, அது காட்டு தீப்போல் பரவி, பலரது உள்ளங் களையும் நெகிழ வைத்தி ருக்கிறது. மேலும், 7 ஆயிரத் திற்கு மேற்பட் டவர்கள் அதனை ஷேர் செய்தியிருக் கிறார்கள்.
”முதல்ல, இது வைரலா கும்னு நான் நினைக்கலை. ஆனா, இதைப் படிக்கும் நாலு பேருக்குள்ள மாற்றம் வந்தாலும் சந்தோஷமே.
நாம இக்கட்டான சூழ்நிலை யில் இருக்கிறப்ப நமக்கு அறிமுக மில்லாத வங்க உதவி செய்வாங்க. அவங்க எல்லாரும் நமக்கு கடவுள் தான்.
எனக்கு பாபா மாதிரி”, என்று மகிழ்ச்சி யாக கூறுகிறார் வரிஜாஸ்ரீ. இவர் கூறிய வார்த்தை கள் சாத்திய மானால், இந்த உலகம் அன்பாலா னதாகி விடும்.
மனிதர்கள் மீது நம்பிக் கையை விதைத்த பாபாவுக்கும், அதை மறக்காமல் பதிவிட்ட வரிஜாஸ்ரீ வேணு கோபாலு க்கும் அன்பு வாழ்த்துகள்!
இதை படிக்கும் நீங்களும் உங்க ளாலான உதவியை, முகம் தெரியாத வர்களுக்கு உள்ளம் மகிழ்ந்து செய்யுங்கள்!
இதை படிக்கும் நீங்களும் உங்க ளாலான உதவியை, முகம் தெரியாத வர்களுக்கு உள்ளம் மகிழ்ந்து செய்யுங்கள்!