லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் : அப்பா, எனக்கு கோவில்ல செக்ஸ் உணர்ச்சி அதிகமா இருக்கு ! உங்கள் பதினாறு வயது மகன் உங்களிடம் வந்து இப்படிச் சொன்னால் என்ன செய்வீர்கள்?
தடுமாறிப் போவீர்களா..?
தவிர்க்க நினைப்பீர்களா..?
அல்லது தாம் தூம் என்று குதிப்பீர்களா..?
மறைந்த எழுத்தாளர் லா.ச.ரா. வின் மகன் சப்தரிஷி ,
தனது பதினாறு வயதினிலே,
தன் தந்தையிடம் வந்து இப்படிச் சொல்லி இருக்கிறார்..!
அப்புறம் நடந்ததை சப்தரிஷியே சொல்கிறார் :
பதினாறு வயசு இருக்கும்..எங்கப்பாகிட்ட போய் ‘அப்பா எனக்கு கோவில்ல செக்ஸ் உணர்ச்சி அதிகமா இருக்கு’ன்னு சொன்னேன்...
அதுக்கு ‘அங்கதாண்டா பொம்மனாட்டிங்க குளிச்சுண்டு வருவா..இந்த வயசுல அப்படித்தான் இருக்கும்..இன்னும் ரெண்டு வருஷம் போனா சரியாகிடும்’ என்றார்.
ஆச்சரியமாக இருக்கிறது..!
என்ன ஒரு மெச்சூரிட்டி ..!
தன் மகனிடம் இப்படி மன முதிர்ச்சியுடன் நடந்து கொண்ட லா.ச.ரா. , தன் மனைவியிடம் எப்படி..?
நீ வேணும்ன்னா என்னை ராம்ன்னு கூப்பிட்டுக்க...
லா.ச.ரா. தன் மனைவியிடம் இப்படிச் சொன்னது...கல்யாணம் முடிந்த முதலாவது நாளிலேயே ...!
இன்று பெண்ணுரிமை , பிள்ளைகள் உரிமை என்று பேசுகிறோம்...!
ஆனால்.. கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மனிதர் தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்த சுதந்திரம் இது..!
லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் -
(1916 - அக்டோபர் 29, 2007)
சுருக்கமாக லா.ச.ரா. எழுதிய “சிந்தா நதி” - சுய வரலாற்று நினைவுகளின் தொகுப்புக்காக அவருக்கு “சாகித்ய அகாதமி” விருது கிடைத்ததாம்..!
இந்த நேரத்தில் லா.ச.ரா.வின் மகன் சப்தரிஷி சொன்ன இன்னொரு விஷயம் என் நினைவுக்கு வருகிறது :
“நாங்க அம்மாவோடதான் சினிமாவுக்கு போவோம்... அப்பா வீட்டில் சமையல் செய்துவிட்டு எங்களுக்காக காத்திருப்பார்.
அவர் நல்ல எழுத்தாளர் என்பதைவிடவும் எங்களுக்கு நல்ல அப்பாவாக இருந்தார்...”
என்னைப் பொறுத்தவரை “சாகித்ய அகாதமி” விருதை விடப் பெரிய சாதனை விஷயமாக நான் நினைப்பது லா.ச.ரா.வின் மகன் சப்தரிஷி , தன் தந்தைக்கு கொடுத்த இந்த பாராட்டைத்தான் ..!
.
“சாகித்ய அகாதமி” பல பேருக்கு கிடைக்கலாம்..!
எத்தனை பேருக்கு கிடைப்பார்கள் , லா.ச.ரா. போல இப்படி ஒரு அப்பா...!