பீட்டாவிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்... மின்னஞ்சல் மூலம் அவர்கள் அளித்த பதில்கள்...
1. மிருக வதையைத் தடுக்க வேண்டு மென்றால் நீங்கள் எதிர்க்க வேண்டியது கார்ப்பரேட் களைத் தானே. எளிய மக்களின் தட்டிலி ருக்கும் உணவை ஏன் எதிர்க் கிறீர்கள்?
" எல்லா வற்றிற்கும் சும்மா கார்ப்பரேட் மீது குற்றச் சாட்டுகளை வைப்பது சரியாக இருக்காது. மாற்றங்கள் தனி மனிதர்க ளிடமிருந்து வரவேண்டும்.
இங்கு இறைச்சி யின் தேவை அதிகமாக இருப்பதால் தான், கார்ப்பரேட் கம்பெனிகள் அந்த வியாபாரத்தில் ஈடுபடு கின்றனர்.
மக்கள் இறைச்சி சாப்பிடு வதைக் குறைத்தால், பெரு நிறுவன ங்கள் தானாக அதைக் குறைத்துக் கொள்ளும்.
கேஎஃப்சி, சுகுணா சிக்கன் போன்ற நிறுவனங் களிடம் இறைச்சி தயாரி ப்பில் கடுமையான சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை களை வைத்து ள்ளோம்."
2. வீகன் உணவு முறையை முன் வைக்கும் நீங்கள், பால் பொருட்கள் தயாரிப்பில் முன்ன ணியில் இருக்கும் பாபா ராம் தேவின் "பதஞ்சலி" நிறுவன த்தை எதிர்த்து ஏதாவது செய்தி ருக்கிறீகளா ?
"நாயின் பால் நாய்க் குட்டிகளு க்குத் தான். அது போல பசுவின் பால் கன்று களுக்குத் தான். பசும்பால் குடிப்பதால் மனிதர் களுக்கு
பல்வேறு வகையான நோய்கள் ஏற்படு கின்றன." ( கடைசி வரை பதஞ்சலி குறித்த கேள்விக்கு எந்த நேரடியான பதிலும் கிடைக்க வில்லை )
3. ஏழைகளு க்கு ஊட்டச் சத்து கிடைப்பது கறியி லிருந்து தான். ஆர்கானிக் காய் கறிகளின் விலை சாமானியர் களுக்கு ஏற்றதாக இல்லை. இதை எப்படி சமன் செய்வீர்கள் ?
உலக சுகாதார நிறுவனம் 50% அளவிற் கான ஊட்டச் சத்து குறை பாட்டிற்கான காரணம் குடலில் ஏற்படும் புழுக்கள், தொடர் சீத பேதி, திறந்த வெளியில் மலம் கழிப்பது,
அசுத்தமான தண்ணீரைக் குடிப்பது போன்ற காரணங்கள் தான் என்று சொல்லியி ருக்கிறது.
ஏழை மக்களுக்கு அசைவ உணவு களிலிருந்து தான் ஊட்டச் சத்து கிடைக் கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, அவர்களின் ஊட்டச் சத்து பிரச்னை அவர்கள் உணவில் இல்லை.
அசுத்த மான சூழலில், சுற்றத்தில் இருப்பதால். அதை அவர்கள் சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதுமான தாக இருக்கும்.