அந்த சிறு விதை மண்ணில் விழுகிறது. காற்று அடிக்க, அடிக்க... மண் அதை மூடுகிறது. மழை வர இன்னும் சில காலங்கள் இருக்கின்றன. துளி நீர் தன் மேல் படும் நொடிக்காக உயிர் பிழைத்துக் காத்திருக்கிறது.
பல இடர்ப் பாடுகளைக் கடந்து... அந்த மழை நீர் அதை நனைக்கும் நாள் வரை பிழைத் திருந்தது. நீர்த் துளிகள் பட, பட... அத்தனை மகிழ்ச்சி அந்த விதைக்கு. கொஞ்சம், கொஞ்சமாக துளிர் விடத் தொடங்குகிறது.
( PETA People for the Ethical Treatment of Animals)
புயல், மழை, வெயில் என எல்லா வற்றையும் கடந்து செடியாக உருவெடு க்கிறது. அந்த செடியில் பூக்கள் பூக்கின்றன... அது அத்தனை அழகு.
சில நாட்களில் அந்தப் பூ, காயாக காய்க்கிறது. சில நாட்க ளிலேயே அந்தக் காய் கனியாக கனிகிறது.... அது அத்தனை சுவை. மனிதனின் அரக்கக் கைகள் அந்தச் செடியைப் பிடுங்கு கின்றன.
அது எத்தனையோ முயற்சித்தும், அதற்கு உதவிட பக்கத்தி லிருக்கும் செடிகள் உதவிக்கு வந்தும் கூட தடுக்க முடிய வில்லை. அந்தக் கொடூர கைகள் அதைப் பிடுங்கி விடுகின்றன.
செத்த... சாகடிக்கப் பட்ட அந்தச் செடி இவன் ருசிக்க தட்டில் உணவாய், இறந்துக் கிடக்கிறது. செடி கொன்று தின்ற அவன் ஆரோக்கிய மாக வாழ்ந்து இறந்தான்.
இந்த வர்ணனை யில் செடியின் வலி தெரிகிறதா? ... செடிகளு க்கும், கொடிகளு க்கும் உயிர் இருக்கிறது என்பது புரிகிறதா?, அதை மனிதன் கொடூரமாக கொன்று தின்கிறான் என்பது விளங்கு கிறதா?...
இதுவும் ஒரு கொலை என்பதை ஒப்புக் கொள்ள முடிகிறதா ?... இதை யெல்லாம் பாவம் என்று ஒப்புக் கொள்ள முடியா விட்டால்...
ஆடு, மாடு, கோழிகளைக் கொன்று அசைவம் சாப்பிடு வதையும் பாவம் என்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. முன்னது இயற்கை யின் விதி என்றால்... பின்னதும் இயற்கை யின் நியதி தான்.
“இனி அரசு ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சி களில் அசைவ உணவுகள் பரிமாறக் கூடாது. ஏற்கனவே, ஜெர்மானிய அரசு இந்த ஆகச் சிறந்த முடிவை எடுத்து ள்ளது. கருணை யுள்ளம் கொண்ட, சூழலியல் அக்கறை கொண்ட,
ஆரோக்கிய வாழ்வின் மீது நம்பிக்கைக் கொண்ட சைவ உணவுப் பழக்கம் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த முடிவை சாத்தியப் படுத்தி உலக நாடுகளுக் கெல்லாம் முன்னோடியாக இருக்க வேண்டும்..."
என்று ஒரு கடிதத்தை "பீட்டா" சமீபத்தில் அனுப்பிய திலிருந்து தொடங்கு கிறது இந்தக் கதையும், கதைக் கான காரணிகளும்.
இந்தக் கடிதத்தோடு பீட்டா குறிப்பிட்டி ருக்கும் சில தகவல்கள், இனி கறி கடைகளை நோக்கிப் போனால்,
நீங்கள் குற்றவாளி என்ற முத்திரையை முகத்தில் சுமக்க நேரலாம் என்ற அளவிற்கு உள்ளது. இந்திய தேசத்தில் நிலவும் கடுமை யான பஞ்சத்துக்கு, பூமி வெப்ப மயமாதலு க்கு,
வானிலை மாற்றங் களுக்கு, இயற்கைப் பேரிடர்களுக்கு என எல்லா வற்றிருக்கும் முக்கியக் காரணி மாமிசம் உண்பது என்ற கருத்தை முன் வைக்கிறது பீட்டா.
பீட்டாவின் கணக்குப் படி இந்தியாவில் 20 கோடி பேர் வரை ஊட்டச் சத்து குறை பாட்டால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதே சமயம், உலகின் 60% தானிய உற்பத்தி கால் நடைகளுக் காகப் போடப் படுகின்றன.
ஒரு கிலோ மாட்டுக் கறியை உற்பத்தி செய்யும் செலவுக்கு, 10 கிலோ தானியங் களை உற்பத்தி செய்யலாம்.
உலகில் வெளியிடப் படும் " பசுமை இல்ல வாயுக்களில்" 14.5% அளவிற் கான வாயுக் களுக்கு கால்நடை வளர்ப்பு காரணியாக இருக்கிறது.
எல்லா வற்றிரு க்கும் மேலாக " இயற்கைச் சூழலுக்கான மாற்றத்தை நம் தட்டுகளில் இருந்து தொடங்க வேண்டும்" என்று சொல்லி யிருக்கிறார் கள்.
அதாவது, சிகப்பு ரத்தத்தை நீக்கி, பச்சை ரத்தத்தை அதில் நிரப்பினால், பூமி செழிக்கும் என்பது பீட்டா முன் வைக்கும் கருத்து.
புள்ளி விவரங் களைப் படிக்கும் போதே புல்லரிக் கிறதா?. இங்குதான் சற்று கவனமாக இருக்க வேண்டி யிருக்கிறது. வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்" என்ற நம்பிக்கை யில் இருப்பவர்கள்,
திருவள்ளுவரின் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் குறளை மனதில் நிறுத்திக் கொண்டு மற்ற தகவல் களைப் படியுங்கள்.
உதாரணத் துக்கு பீட்டாவின் கனவு நிறை வேறியே விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
( பீட்டாவின் கனவை அவர்களே நிறைவேற விட மாட்டார்கள் என்பது தனிக் கதை, தனி அரசியல்). என்ன மாதிரியான அடிப்படை பிரச்னைகள் வரும்?... உணவு சுழற்சியில் பெரும் குழப்பம் ஏற்படும்,
பொருளாதார வீழ்ச்சி, வேலை வாய்ப்பின்மை, உணவுப் பஞ்சம், நில மதிப்பு வீழ்ச்சி... எனத் தொடங்கி இறுதியில் மனித இனத்தின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும்.
உலகளவில் 130 கோடிக்கும் அதிக மானோர் கால்நடை வளர்ப்புத் துறையில் ஈடு பட்டுள்ளனர். இதில் 100 கோடி பேர் ஏழை, சிறு மற்றும் குறு விவசாய மக்கள்.
உலகமே சைவமாக மாற வேண்டு மென்ற பீட்டாவின் கனவு நிறைவேறும் என்றால், 100 கோடி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்படும்.
ஐநாவின் அறிக்கைப்படி உலக ஜிடிபியில் 1.4% கால்நடை வளர்ப்புத் துறை பங்களிப்பதாக சொல்லப் படுகிறது.
மேலும், கால்நடை வளர்ப்பை அழிப்பதன் மூலம், உலகில் மிகப் பெரிய அளவிற்கு காலி யிடங்கள் கிடைக்கும்.
அதை மனிதர் களுக்குப் பயன் படுத்திக்கலாம். உலகில் பிளாட்பார வாசிகளே இருக்க மாட்டார்கள் என்ற ஆகப் பெரும் கருத்தை தெரிவித் துள்ளது பீட்டா.
அடிப்படை யான கேள்வி... நிலம் கிடைக்கும் சரி. மாமிசம் சாப்பிட்ட வர்களுக்கு மாற்று உணவைக் கொடுக்க இங்கு தானிய உற்பத்தி இருக் கிறதா?,
அப்படியே அதை செய்ய வேண்டு மென்றால், அதற்கான விவசாய நிலங்கள் இங்கி ருக்கா? என்பதற் கான பதில் அவ ர்களிடம் இல்லை.
பீட்டாவில் இங்கு கிரண்பேடிக்கள் தான் இருக்கி றார்கள். அவர் களிடம் இதற்கு மேல் பெரிதாக எதையும் எதிர் பார்த்திட முடியாது. பீட்டா முன் வைக்கும் விஷயங்கள் குறித்து சூழலி யலாளர் நக்கீரன் அவர்களிடம் கேட்டோம்...
கால்நடை வளர்ப்பு என்பது பசுமைக்குடில் வளி உற்பத்தியில் ஏறத்தாழ இருபது விழுக்காடு பங்கை அளிப்பதாக உணவு வேளாண் கழகம் (FAO) தெரிவிப்பது உண்மை தான்.
இதைக் காரணம் காட்டித் தான் இந்தத் திடீர் இந்துத்துவா சூழலி யாளர்கள் இங்குக் குதிக்கி றார்கள். இங்கு ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கணக்கு மேற்கத்திய பாணியின் பண்ணை முறை கால்நடை வளர்ப்புக்கு தான் பொருந்தும்.
இதை இந்திய நாட்டின் பாரம்பரிய கால்நடை வளர்ப்பு முறையோடு பொருத்துவது அபத்தம். இதை ஓர் எடுத்துக் காட்டோடு காணலாம்.
பீட்டாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் நக்கீரன்ஓர் ஐக்கிய அமெரிக்கர் ஆண்டொ ன்றுக்கு 1000 கிலோ தானியத்தை உண்ணுகிறார் என வைத்துக் கொள்வோம்.
அதேவேளை ஓர் இந்திய நாட்டவர் உண்ணும் உணவு ஆண்டொ ன்றுக்கு 190 கிலோ தான். மனித வயிறுகளின் கொள்ளளவு ஒன்று தானே? பின் எப்படி இது சாத்தியம் எனத் தோன்றலாம்.
ஐக்கிய அமெரிக்க நாட்டவர் நேரடியாக நுகர்வது வெறும் எழுபது கிலோ மட்டுமே. எஞ்சிய 930 கிலோ தானியத்தை ஆடு மாடு கோழி இவை களுக்கு
அளித்து அவற்றி லிருந்து கிடைக்கும் 120 – 150 கிலோ இறைச்சி, பால் முட்டை ஆகியவற்றை அவர் உணவாக உண்கிறார்.
ஆனால் 190 கிலோ தானிய த்தை நேரடியாக உண்ணும் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் தன் நுகர்வுக்குப் பின் எஞ்சிய தானிய ங்களின் பகுதியையும், பிற பயிர்களின் பகுதியையும் தான் தம் கால்நடைகளுக்கு அளிக்கிறார்.
வைக்கோல், தவிடு, குருணை, புண்ணாக்கு, பருத்திக் கொட்டை என இவை அளிக்கப் படுகிறது. இது தவிர மனிதருக்கு உணவாகப் பயன்படாத தாவரங் களும் இலை தழைகளும் தான்
அவற்றின் முதன்மை யான உணவு. வீட்டுக்கு நாலு மாடுகள் வைத்தி ருக்கும் எளிய மக்கள் பெரும்பாலும் மேய்ச்சலை நம்பியே வளர்ப்ப வர்கள்.
மேலும் இவர் களுடைய மாடுகள் தானியங் களை உண்ணுவ தில்லை. இவ்வகை யில் பசுமைக் குடில் வளி வெளியீடு எங்கு நடக்கிறது என்பதை விளக்க வேண்டும்.
கால் நடைகள் பசுமைக் குடில் வளியை வெளியிட்டு புவி வெப்ப மயமாதலு க்குக் காரணமாக இருக்கிறது என்றால்
அதில் கோமா தாக்களும் அடக்கம் தானே? .எந்தப் பசுவின் பின் புறத்தை இந்துத்துவா ஆட்கள் புனிதமாகக் கருதி கும்பிடுகி றார்களோ
அது வெளியிடும் குசுதான் மீத்தேனின் உற்பத்தி இடம். ஒரு பசு ஆண்டொ ன்றுக்கு 70 - 120 கிலோ மீத்தேனை இவ்வாறு வெளியி டுகிறது.
இரு பசுக்கள் இணைந்து ஓராண்டுக்கு இவ்வாறு வெளியிடும் மீத்தேனின் அளவு, ஆண்டொன்றுக்கு ஒரு கார் வெளியிடும் கரிக் காற்றுக்கு (CO2) சமம். கரிக் காற்றை விட மீத்தேன் 23 மடங்கு ஆபத்தானது.
இதற்காகப் புவி வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு மீத்தேனை வெளியிடும் அனைத்து பசுக் களையும் கொன்று விடுவோம் எனும் அசட்டுக் கோரிக்கை வைக்கப் பீட்டாவால் முடியுமா?
பசுவை மூல தனமாக வைத்து பதஞ்சலி நெய் வணிகம் செய்யும் பாபா ராம்தேவிடம் ஏன் பீட்டா இக்கோரி க்கையை வைக்க வில்லை?
அவருடைய பண்ணை யிலிருக்கும் பசுக்களிடம் இருந்து எவ்வளவு மீத்தேன் உற்பத்தி யாகும்? பீட்டாவின் அடிப்படைக் கொள்கை யான பால் என்பது புலால் உணவு என்பதை
இந்திய பீட்டா ஏன் இந்துத்துவ அமைப்பு களிடம் வலி யுறுத்துவ தில்லை? இவர்கள் முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் அனைத்து நிகழ்ச்சி களிலும் பாலோ
அல்லது பால் பொருட்களோ பயன் படுத்தக் கூடாது என்ற கோரி க்கையை முதலில் வைக்கட்டும். ஏன் முதலில் மோடி அரசிடமாவது வைக்குமா? வைக்காது.
ஏனெனில் எல்லோரு க்கும் தெரிந்த அதே பதில்தான். அதனால் தான் இந்துத்துவ பீட்டா புலால் உணவை மட்டுமே குறி வைக்கிறது." என்று கோபமாக சொல்லி முடிக்கிறார்.
பீட்டா சொல்வதை கண் மூடித்தனமாக எதிர்க்க வேண்டிய அவசிய மில்லை. உலகம் முழுக்கவே பல மட்டத்தி லிருந்தும் பீட்டாவின் முரண் பட்ட கருத்து க்களுக்கு கண்டனங்கள் வலுத்து வரவே செய்கின்றன.
உலகிலேயே வீகன் உணவுப் பழக்கம் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் முன்ன ணியில் இருப்பது இஸ்ரேல். யூதர்கள் நிறைந்த நாடு. ஜெர்மனி யிலும் அதிகள விலான மக்கள் இருக்கிறார்கள்.
சரி... இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன.?
"வீகன் டயட்டைக் கொண்டு வருவது வலது சாரிகளின் கொடூரக் கனவு என்றால், அதிகப் படியான மாமிசத்தைப் புசைப்பது எங்கள் உரிமை என்று இடது சாரிகள் பிடிவாத மாக இருப்பதும் நிறைவேறாத கனவாகத் தான் இருக்கும்.
இரண்டி ற்கும் மத்தியில் பயணிக்கப் பழக வேண்டும். இந்தப் பிரச்னையைக் களையத் தொடங்க வேண்டிய இடம் ஏழைகளின் தட்டு அல்ல...
கால்நடை வளர்ப்பை பெரும் வியா பாரமாக்கி பணம் பார்க்கும் கார்ப்பரேட் கம்பெனி களிடம் இருந்து தான்" என்பது நடுநிலை யாளர்களின் வாதமாக இருக்கிறது.
"சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர் களுக்கு வீகன் டயட் சார்ட் பார்த்து சாப்பிட நேரமும் இல்லை,
அதற்கான பொருளாதார வசதியும் இல்லை. அவர்களுக்கான புரோட்டினும், நியூட்ரிஷனும் இன்னபிற ஊட்டச் சத்துக்களும் கிடைப்பது மாமிசத்தில் தான்.
காய்கறி களிலேயே கிடைக்கும் என்றால், பூச்சி மருந்துகள் அடிக்கப்படாத காய் கறிகளை வாங்கும் வசதி சாமானியர் களுக்கு இல்லை.
அசைவ உணவு உண்பதைக் குறைக்க வேண்டும் என்று நினைத் தால், அசைவ த்தின் விலையை உயர் த்துங்கள் பரவாயில்லை.
அதே சமயம், ஆரோக்கியமான காய்கறிகளை எளியவர் களும் வாங்கும் விலைக்கு கொண்டு வாருங்கள்.
பின்பு, உங்கள் மேல்வர்க்க புத்தியி லிருந்து வெளிப்படும் இயற்கைக் காதலை வெளிப்படுத்தலாம் என்று சொல்லி யிருக்கிறார் மார்கோ ஸ்ப்ரிங்க்மேன் என்கிற உணவு ஆராய்ச்சியாளர்.
மாமிசம் உண்ணாமல் இருப்பது என்பது மனிதனின் முடிவாக இருக்கலாம், ஆனால், மாமிசம் உண்பது மனித இனத்தின் இயல்பு என்பதை மறந்திடக் கூடாது.