பல பைக் தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய மாடல்கள் எனக்கூறி சிறிய மாற்றங் களை மட்டுமே செய்து அவ்வப் போது ஒரு மாடலை ரிலீஸ் செய்து வருகின்றன.
ஆனால் தற்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் எலெக்ட்ரிக் முறையில் இயங்கும் ஒரு நவீன பைசைக்கிள் ஒன்றை வடிவமைத்து இந்த வருடத்துக்கான வேர்ல்ட் மொபைல் காங்கிரஸில் வெளியிட் டுள்ளனர்.
இதற்கு முன்னர் சில நிறுவனங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என்றாலும் இதன் சிறப்பம்சம் நவீன மற்றும் எளிமையான தொழில்நுட்பம் என்றே கூறலாம்.
இந்த பை சைக்கிளை நாம் சாதாரணமாக சார்ஜ் செய்வதைப் போல் பயன் படுத்தினால் போதுமானது. மிக எளிமையான எடையில் எளிதில் எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
மேலும் 15 டிகிரி வரை சாய்மானம் கொண்ட பகுதிகளிலும் இதில் எளிதாக பயணிக்கும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, இதில் நமது மொபைல்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப் பட்டுள்ளது. இதன் வடிவம் மிகச்சிறிதாக இடத்துக்குத் தேவையானபடி நாம் மடித்து வைத்துக் கொள்ளலாம்.
பெரும்பாலான நபர்கள் இந்த புதிய வகை பை சைக்கிளை ஆவலுடன் பார்த்துச் சென்றுள்ளனர். இதன் வெளியீடு விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி யுள்ளது.