இதயத்தை பரிசோதனை செய்யும் கார்டியாக் எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் !

முழுமை யான உடல் பரிசோதனையை செய்யும் எம்.ஆர்.ஐ. தொழில் நுட்பம் பற்றி பலருக்கும் தெரிய ஆரம்பித் திருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக, 
கார்டியாக் எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் !
இதயத்தை மட்டும் நுட்பமாக பரிசோதனை செய்யும் கார்டியாக் எம்.ஆர்.ஐ. தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இது பற்றி இதய மருத்துவர் டாக்டர் கார்த்திகேயனிடம் பேசினோம்...

‘‘எம்.ஆர்.ஐ. பரிசோதனை யில் பரம்பரையாக வரும் நோய்கள், நீரிழிவு, புற்றுநோய், விபத்து களால் ஏற்பட்டிரு க்கும் பாதிப்புகள் என

உடலின் எல்லா பகுதி களையும் பரிசோதனை செய்ய முடியும். கார்டியாக் எம்.ஆர்.ஐ. என்பது இதயத்தை மட்டும் பரிசோதித்துப் பார்க்கும் நுட்பமான சோதனை முறை.

இதய ரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பு களைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம், இதயத்தின் தசைகளில் இருக்கும் பாதிப்புகள், 

இதயத்தின் நான்கு அறைகளான ஆரிக்கிள்கள், வென்ட்ரிக் கிள்களில் ஏற்பட்டி ருக்கும் பாதிப்புகள், இதயத்தைச் சுற்றியுள்ள பெரிகார்டியல் உறையில் இருக்கும் பாதிப்புகள், 
இதயத்தை பரிசோதனை செய்யும் கார்டியாக் எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் !
இதயத்தி லிருந்து உடலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் அயோட்டா வில் இருக்கும் அடைப்புகள், நுரையீரலில் இருந்து இதயத்துக்கு வரும் ரத்த நாளங்களில் இருக்கும் அடைப்புகள், 

பிறவியிலேயே ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் என்று இதயம் தொடர் புடைய பல வகை பாதிப்பு களை நுட்பமாக இதில் கண்டறிய முடியும்...’’ என்ன செலவாகும்?

‘‘இப்போது தமிழகத்தில் சென்னை யில் மட்டுமே, 2 தனியார் மருத்துவ மனைகளில் இந்த வசதி இருக்கிறது. அரசு மருத்துவ மனை களில் எம்.ஆர்.ஐ. வசதி இருக்கிறது. 

15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சோதனையைப் பொறுத்து கட்டணம் மாறும். ஒருசில மருத்துவ மனைகளில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கட்டண த்தில் சோதனை செய்யப் படுகிறது...’’

எம்.ஆர்.ஐ. கருவிக்கும் கார்டியாக் எம்.ஆர்.ஐ. கருவிக்கும் என்ன வித்தியாசம்?
எம்.ஆர்.ஐ. கருவிக்கும் கார்டியாக் எம்.ஆர்.ஐ. கருவிக்கும் என்ன வித்தியாசம்?
‘ஒரு கணிப் பொறியில் மென்பொருள் சேர்ப்பதைப் போல, வழக்கமான எம்.ஆர்.ஐ. கருவியில் இதயத்தை பரிசோதிக்கும் மென் பொருளைச் சேர்த்தால் 

அது இதயத்தை யும் பரிசோதிக்கும் கார்டியாக் எம்.ஆர்.ஐ. கருவியாகி விடும். இதயத்தில் வலி இருப்பதாக உணர்பவர்கள் முதலில் ஒரு இதய நல மருத்துவரைத் தான் அணுக வேண்டும். 

மருத்துவர் பரிந்துரைத்த பின்னரே கார்டியாக் எம்.ஆர்.ஐ. செய்ய வேண்டும். .... ஜி.ஸ்ரீவித்யா - நன்றி குங்குமம்
Tags:
Privacy and cookie settings