வெள்ளத்தில் சிக்கியப் பெண்ணை மீட்டுக் கொண்டு செல்லும் வழியில் விமானத் திலேயே குழந்தை பிறந்துள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையால் பல் இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அமேசான் காடுகள் நிறைந்த இந்நாட்டில் மழை வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
முற்றிலும் எவ்வித தகவல் தொடர்பும் போக்கு வரத்து வசதியும் இன்றி பல கிராமங் களும் தத்தளித்து வருகின்றன.
இந்தப் பேரிடர் காலத்தில் மரியா பின்கோ என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட் டுள்ளது.
மீட்புப் பணியில் ஈடுபட்டி ருந்த பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து அப்பெண்ணை ஹெலிகாப்டரில் மீட்டுச் சென்றனர்.
ஆனால் மருத்துவ மனைக்குச் செல்லும் முன்னரே வழியிலேயே அப்பெண்ணு க்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.