மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ள விஜயகாந்துக்கு சில மருத்துவ ரீதியான உதவிகளை உறவினர்கள் செய்ய மறுத்து வருகிறார்களாம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில் மருத்துவ ரீதியாக சில உதவிகளை ரத்த உறவுகள் செய்ய மறுத்து வருவதால் அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியடைந் துள்ளதாக கூறப் படுகிறது.
விஜயகாந்த் அண்மையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை க்காக மியாட் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. ஆனால் இந்த சிகிச்சை பல நாட்களாக நீடித்தது.
ஆர்கே நகர் பிரசாரம் இதை யடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு ஆர்கே நகர் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். ஒரு நாள் மட்டுமே விஜயகாந்த் பிரசாரம் செய்த நிலையில் இடைத்தேர்தலே ஆர்கே நகரில் ரத்து செய்யப் பட்டது.
உறவுகளிடம் உதவி இந்த அறிவிப்புக்குப் பின்னர் மீண்டும் விஜயகாந்த் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
தற்போது விஜயகாந்தின் ரத்த உறவுகளிடம் மருத்துவ ரீதியாக சில உதவிகளை பிரேமலதா உள்ளிட்டோர் கேட்டிருந் தனராம்.
உறவுகள் அதிருப்தி ஆனால் விஜயகாந்த் செல்வாக்குடன் இருந்த காலத்தில் எங்கள் பக்கமே எட்டிப் பார்க்க விடமால் வைத்திருந்து விட்டு
இப்போது வந்து வாசல் கதவை தட்டுவதா? என கோபத்தில் இருக்கின் றனராம் ரத்த உறவுகள். இதில் கலங்கிப் போனதாம் விஜயகாந்த் குடும்பம்.
வெளி நாட்டில் சிகிச்சை? இருப்பினும் விடாமுயற்சியாக ரத்த உறவுகளின் ஒத்துழைப்பைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறதாம் விஜயகாந்த் குடும்பம்.
இதனைத் தொடர்ந்து வெளிநாடு ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்கின்றன தேமுதிக வட்டாரங்கள்.