தீபாவுக்கு வந்த கொலை மிரட்டல் !

1 minute read
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
தீபாவுக்கு வந்த கொலை மிரட்டல் !
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 62 வேட்பாளர் கள் களம் இறக்கி யுள்ளனர்.

இந்த தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளை சேர்ந்த வேட் பாளர்கள், திமுக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி, இடது சாரிகள் என பலமுணை போட்டியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை சேர்ந்த தீபாவும் களம் இறங்கி யுள்ளார்.

இந்த கடும் போட்டியில் படகு சின்னத்தில் போட்டியிடும் தீபா, நான் வெற்றி பெறுவேன் என கூறி தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலை யில் தீபா சார்பில் தேர்தல் ஆணைய த்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

அந்த புகாரில் தனக்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மர்ம நபர்களால் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும், 
தேர்தலில் போட்டி யிடுவதில் இருந்து விலகு மாறும் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவ தாகவும் கூறப் பட்டுள்ளது.

ஆனால், கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளதாக தீபா அளித்துள்ள புகார் அவரது அரசியல் முதிர்ச்சியை காட்டுவ தாகவும் இது வெறும் அரசியல் நாடகம் எனவும் மற்ற கட்சியினரால் விமர்சிக்கப் படுகிறது.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings