ஆளுநரைச் சந்திக்கும் தீபா... அதிர்ச்சியில் தினகரன் !

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிலவரம் குறித்து தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துப் பேச தீபா முடிவு செய்துள்ளார்.
ஆளுநரைச் சந்திக்கும் தீபா... அதிர்ச்சியில் தினகரன் !
இந்தத் தகவலை யறிந்த வேட்பாளர்கள் டி.டி.வி. தினகரன், மதுசூதனன் தரப்பு அதிர்ச்சி யடைந்துள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத் தேர்தலில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா 'படகு' சின்னத்தில் போட்டி யிடுகிறார். தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். 

ஒவ்வொரு பிரசாரத் திலும் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் அணி வேட்பாள ர்களைக் கடுமை யாக விமர்சித்து வருகிறார். தீபாவைக் காண வரும் கூட்டத்தை அதிர்ச்சியோடு எதிரணியினர் பார்த்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் பணப் பட்டுவாடா, அன்பளிப்பு மற்றும் விதி முறைகள் மீறல் உள்ளிட்ட வைகள் குறித்து தேர்தல் ஆணை யத்திடம் மாறி மாறி புகார்கள் கொடுக்கப் பட்டு வருகின்றன. 
புகாரின் பேரில் தேர்தல் ஆணையமும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சுயேச்சை தீபா, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்திக்க முடிவு செய்துள்ளார்.

செல்லராஜா மணி இது குறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைமைச் செய்தித் தொடர்பாளர் செல்லராஜா மணி கூறுகையில், 

"கடந்த சில தினங்க ளுக்கு முன்பு தீபாவுக்கு பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக சம்பந்தப் பட்ட போலீஸ் நிலையம், தேர்தல் அலுவலர், போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் கொடுத் துள்ளோம். 

தேர்தல் விதிமுறை களை மீறுபவர்க ளைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். 
இதனால், ஆளுநரைச் சந்தித்து ஆதாரத்துடன் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக ஆளுநர் அலுவலகத்தில் அனுமதி கேட்டுள்ளோம். 

அனுமதி கிடைத்தவுடன் நாளை அவரைச் சந்திப்போம். இந்த சந்திப்பில் தீபாவும் பங்கேற்க வாய்ப்புள்ளது. பிரசாரத்துக்கு அவர் சென்றால் பேரவையின் முக்கிய நிர்வாகிகள் சந்திப்போம் என்றார்.

ஆளுநரை தீபா சந்திக்கும் தகவல் சசிகலா அணிக்கும் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருப்பதாக உள்விவர வட்டார ங்கள் தெரிவித்தன. 

மேலும்,தேர்தல் பிரசாரத்தில் தீபா, "தொகுதியில் இரவு 2 மணி முதல் 4 மணி வரை பணப் பட்டுவாடா செய்யப் படுகிறது.

அரசு ஊழியர்களில் சிலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பணசப்ளையில் ஈடுபடுவது வேதனையாக இருக்கிறது. 
அமைச்சர் முன்னிலை யிலேயே பணப் பட்டுவாடா செய்யப் படுகிறது. தேர்தலை ஜனநாயக அடிப்படையில் நடத்த வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

தமிழகத்தில் அரசு இயந்திரம் முழுமை யாகச் செயல்பட வில்லை. இதனால் மக்கள் பெரிதும் சிரமப்படு கின்றனர். 

தமிழக மக்களை என்னுடைய சின்னமான படகு, நிச்சயம் கரைச் சேர்க்கும். ஆர்.கே.நகர் மக்கள் பணத்துக்கு ஓட்டை விற்க மாட்டார்கள். 

ஜெயலலிதாவின் மீது அன்பும், விசுவாசமும் கொண்ட வாக்காளர்கள் நிச்சயம் என்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று முழங்கு கிறார்.
Privacy and cookie settings