1. 1988 மார்ச் மாதத்தில் வட இராக்கில் இருக்கும் ஹலப்ஜா நகரில் சரின் குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டது. இதில் 5 ஆயிரம் பேர் ரசாயன வலியை சந்தித்து மரணித்தனர்.
2. சரின் ரசாயனத் தாக்குதலுக்கு ஆளானவர் களுக்கு மாற்று மருந்தாக ( Antidote ) அட்ரோபைன் ( Atropine ) மற்றும் ஆக்ஸிம் ( OXIME ) ஆகியவை உபயோகி க்கலாம்.
3. 1976ல் சிலி நாட்டின் உளவுத் துறை டினா ( DINA ) இது குறித்த ஆராய்ச்சி களை மேற்கொண்டு ஸ்பிரே கேன்களில் சரினை நிரப்பி, நிறைய அரசியல் கொலைகளை செய்ததாக ஒரு தகவல் உண்டு.
4. 1953ல் ரொனால்ட் மேடிசன் எனும் 20 வயது விமானப் படை வீரரின் மீது சரின் செலுத்தி ஆராய்ச்சியை மேற்கொண்டது இங்கிலந்து ராணுவம். சில நிமிடங் களிலேயே அவர் இறந்து விட்டார்.