தனுஷ் பற்றிய தம்பதியரின் வழக்கு ரத்து !

பிரபல தமிழ் நடிகர் தனுஷின் பெற்றோர் தாங்கள் தான் என அறிவிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை ரத்து செய்து உத்தர விட்டுள்ளது.
தனுஷ் பற்றிய தம்பதியரின் வழக்கு ரத்து !
இந்த வழக்கு மதுரை மாவட்டம் மேலூரில் நடை பெற்று வந்தது. மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். 

அதில், தற்போது பிரபலமாக உள்ள நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் கலைச் செல்வன் என்றும், 

2002ஆம் ஆண்டில் பதினொன்றாம் வகுப்பை பாதியில் விட்டு விட்டு சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்குச் சென்று விட்டதாகவும் தங்கள் மனுவில் குறிப்பிட் டிருந்தனர்.

பிரபல நடிகரான பிறகு கலைச் செல்வன் தன் பெயரை தனுஷ் என மாற்றிக் கொண்டு விட்டதாகவும், தங்களை ஒதுக்கி வைத்து விட்டதாகவும் தாங்கள் மிகவும் சிரமப் படுவதால், 

பராமரிப்புத் தொகையாக மாதம் அறுபதாயிரம் ரூபாய் தர வேண்டு மென்றும் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
கலைச் செல்வனின் பத்தாம் வகுப்புச் சான்றிதழை நீதிமன்ற த்தில் தாக்கல் செய்த அந்தத் தம்பதி, அதிலி ருக்கும் அங்க அடையாள ங்களை தனுஷிடம் இருக்கிறதா என சோதிக்க வேண்டு மென்று கோரினர்.

இந்த வழக்கு மேலூர் நடுவர் நீதிமன்ற த்தில் நடைபெற்று வந்தது.

இதில் பதில் அளித்த தனுஷ், தான் கிருஷ்ண மூர்த்தி - விஜயலட்சுமி தம்பதியின் மகன் என்றும், தன்னுடைய உண்மை யான பெயர் வெங்கடேஷ் பிரபு என்றும், 

பிறகு தானும் தன் தந்தையும் பெயர்களை முறையே கஸ்தூரி ராஜா மற்றும் தனுஷ் என மாற்றிக் கொண்ட தாகவும் குறிப்பிட்டி ருந்தார்.

இதற்கிடையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டு மென ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம் தனுஷ் நேரில் ஆஜராகி, தனது அங்க அடை யாளங்களை மதுரை மருத்துவக் கல்லூரி யைச் சேர்ந்த மருத்து வர்களின் சோதனைக்கு உட்படுத்த வேண்டு மெனக் கூறியது. 

அதன்படி தனுஷ் நேரில் ஆஜரானார். ஆனால், மேலூர் தம்பதியினர் அளித்த ஆவணங் களின்படி தனுஷின் உடலில் அடை யாளங்கள் இல்லையென மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தர விட்டுள்ளது.

இருந்த போதும், தாங்கள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக மேலூரைச் சேர்ந்த தம்பதியினர் தெரிவித் துள்ளனர். 

ஊடகங்களிடம் பேசிய மேலூர் தம்பதியின் வழக்கறிஞரான டைட்டஸ், மரபணு சோதனை நடத்து வதற்கு நீதிமன்றம் ஒப்புக் கொள்ளவில்லை. உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்வோம் என்றார்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுக மான தனுஷ், நடிகர் ரஜினி காந்தின் மருமகனும் கூட. 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் தனுஷ், பவர் பாண்டி படத்தை இயக்கி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings